கெய்ஜி கிக்காவா
கெய்ஜி கிக்காவா | |
---|---|
பிறப்பு | 1 அக்டோபர் 1935 ஷினமேனேப்ரீபேச்சர் |
இறப்பு | 1 சூலை 2013 |
தேசியம் | ஜப்பான் |
துறை | கோட்பாட்டு இயற்பியலாலர் |
பணியிடங்கள் | ஒஸாக பல்கலைக்கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | டோக்கியோ நகர பல்கலைக்கழகம் |
விருதுகள் | நிஷிநா நினைவுப்பரிசு (1988) |
கெய்ஜி கிக்காவா (KEIJI KIKKAWA) என்பவர் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த கோட்பாட்டு இயற்பியலாளர் ஆவார்.[1]
இவர் டோக்கியோ நகரப் பல்கலைக்கழகத்தில் தன் இளமறிவியல் பட்டயத்தினை 1959 ல் பெற்றார்.[2] டோக்கியோ பல்கலைகழகத்தில் தன் ஆராய்ச்சிக்குப்பின் 1964ல் முனைவர் பட்டம் பெற்றார்.[2] அதன்பிறகு டோக்கியோ பல்கலைக்கழகம். ரோஸெண்டர் பல்கலைக்கழகம். விஸ்கொன்சின் பல்கலைக்கழகம் போன்றவற்றில் தன் ஆராய்ச்சியை மேற்கொண்டார். 1970 முதல் நீயூயார்க் நகர கல்லூரியிலும் 1974 ல் ஒசாக்கா பல்கலைக்கழகத்திலும் துணை பேராசிரியராகப் பணியாற்றினார். 1979 இல் ஹிரோசிமா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார். 1983 இல் அவர் ஒசாகா பல்கலைக்கழகத்திற்குத் திரும்பி 1993 வரை பணியாற்றினார். 2000 முதல் 2004 வரை கனகாவா பல்கலைக் கழகத்திலும் பணியாற்றினார்.
இவர் சரக் கோட்பாட்டின் முன்னோடி ஆவார். கிக்காவா 1960 களில் பான்கி சகிதா மிகுல் விராசொரா மற்றும் மிசியோ காகு ஆகிய அறிஞர்களுடன் இணைந்து பணியாற்றினார்
விருதுகள்
[தொகு]கெய்ஜி கிக்காவா அவர்கள் 1988ல் நிஷினா நினைவுப்பரிசு பெற்றார்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://scitation.aip.org/content/aip/magazine/physicstoday/news/10.1063/PT.5.6044
- ↑ 2.0 2.1 http://jglobal.jst.go.jp/public/20090422/200901053299665458, Japan Science and Technology Agency
- ↑ http://www.nishina-mf.or.jp/prize.html, Nishina Memorial Foundation