குறை குளோரிரத்தம்
Appearance
குறை குளோரிரத்தம் Hypochloremia | |
---|---|
குளோரின் | |
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் | |
சிறப்பு | உட்சுரப்பியல் |
ஐ.சி.டி.-10 | E87.8 |
ஐ.சி.டி.-9 | 276.9 |
குறை குளோரிரத்தம் (Hypochloremia or Hypochloraemia) என்பது இரத்தத்தில் குளோரைடு அயனி குறையும்போது உண்டாகும் மின்பகுபொருள் இடர்நோய் ஆகும். பொதுவாக குருதிநீரில் இருக்க வேண்டிய குளோரைடு அயனியின் எல்லை 97 முதல் 107 மி.சநி./லி ஆகும்.
பிற அசாதாரணமான நிலைகளில் இக்குறைபாடு அரிதாகத் தோன்றுகிறது.
சுவாச அழுத்தத்திற்கு இக்குறைபாடு காரணமாக இருக்கமுடியும்.[1]
தீராத மூச்சுக்குழல் அமிலவேற்றத்திற்கு இக்குறைபாடு காரணமாக இருக்கமுடியும்.[2]
வளர்சிதை மாற்றக் காரவேற்றத்துடன் இணைந்து குறை குளோரிரத்தக் குறைபாடும் ஏற்படுவது பெரும்பாலும் தீராத வாந்திக்குக் காரணமாகிவிடும்.
இது பொதுவாக குறைனேட்ரியரத்தம் அல்லது உயர் பைகார்பனேட்டு செறிவினால் உண்டாகும் விளைவாகும். சிரைப்பை நார்ப்பெருக்கத்தில் இக்குறைபாடு தோன்றுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Lavie CJ, Crocker EF, Key KJ, Ferguson TG (October 1986). "Marked hypochloremic metabolic alkalosis with severe compensatory hypoventilation". South. Med. J. 79 (10): 1296–9. doi:10.1097/00007611-198610000-00025. பப்மெட்:3764530. http://meta.wkhealth.com/pt/pt-core/template-journal/lwwgateway/media/landingpage.htm?issn=0038-4348&volume=79&issue=10&spage=1296.
- ↑ Levitin H, Branscome W, Epstein FH (December 1958). "The pathogenesis of hypochloremia in respiratory acidosis". J. Clin. Invest. 37 (12): 1667–75. doi:10.1172/JCI103758. பப்மெட்:13611033.