கீழக்குயில்குடி
கீழக்குயில்குடி மதுரையில் இருந்து நாகமலை புதுக்கோட்டைக்கு செல்லும் வழியில் கீழக்குயில்குடி ஊராட்சியில் உள்ளது. இங்கு இருக்கும் சமணமலையில் சமணச்சிற்பங்களும், சமணப்படுகைகளும் காணப்படுகின்றன. மூன்று அடுக்குகள் கொண்டதாக இருக்கிறது இந்த சமணமலை.[1] தமிழ்நாட்டில் வேற எந்த மலையும் சமணர் மலை என்று கூறப்படுவதில்லை.
சமணமலை சிறப்பு
[தொகு]2300 ஆண்டுகளுக்கு முற்பட்ட சமண சமயத்தின் பெருமை, இந்த மலையின் உச்சியில் உள்ள ஆடு உரிச்சான் பாறையில் தமிழ்ப் பிராமி கல்வெட்டு உள்ளது.இது கி.மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.இம்மலையில் பேச்சிப்பள்ளம், மாதேவிப்பெருப்பள்ளி,செட்டிப்பொடவு என மூன்று சிறப்பு மிக்க வரலாற்றுச் சின்னங்கள் உள்ளன.
பேச்சிப்பள்ளம்
[தொகு]இயற்கையாகவே மலையில் அமைந்த சுனையாகும்.இதன் அருகே உள்ள பாறையில், ஓன்பது சமண திரு உருவங்கள் செதுக்கப்ப்ட்டுள்ளன. அவை மகாவீரர், பார்சுவநாதர், கோமாதீஸ்வரர் (பாகுபலி) ஆகியோரின் சிற்பங்களாகும்.
மாதேவிப்பள்ள பேச்சிபள்ளத்துக்குச் சற்று மேலாக உள்ள பாறையில் கி.பி 9ஆம் நூற்றாண்டில் ஒரு சமணக்கோயில் கட்டப்பட்டிருந்தது. சிரவணபெலகோலா எனும் ஊரின் மூல சங்கத்திலிருந்து இந்தப் பள்ளிக்குச் சமணத்துறவிகள் வந்து சென்றனர் என்பதற்குக் கல்வெட்டு அடையாளங்கள் உள்ளன.
செட்டிப்பொடவு
[தொகு]சமணமலையின் தென்மேற்குச்சசரிவில் சிற்பங்களுடன் ஒரு குகை காணப்ப்டுகிறது. ஊர் மக்கள் இதை செட்டிப்பொடவு என்று அழைக்கின்றனர். குகையின் முகப்பில் மகாவீரர் தோற்றமும் உள்ளது.மேலும் குகை வட்டமாகக் குடையப்பட்டுள்ளது. அதன் தென்சுவரில் ஐந்து சமணகல் திருமேனிகள் செதுக்கப்பட்டுள்ளன.இந்தமலை சமணர்களால் உறைவிடப்பள்ளி இருந்தது என இங்குள்ள கல்வெட்டுகளால் அறியப்படுகிறது. இங்கு நீதிமன்றமும் ஒன்று இருந்தது ஆச்சர்யத்தை ஏற்ப்டுத்துகிறது. கட்டிடம் சிதிலம் அடைந்தாலும் இன்றும் உள்ளது.