கிழக்கு சீனக்கடல்
Appearance
30°0′N 125°0′E / 30.000°N 125.000°E சீனாவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள கடல் கிழக்கு சீனக்கடல் என்றழைக்கப்படுகிறது. இது பசிபிக் கடலின் ஒரு பகுதியாகும். இதன் பரப்பளவு 1,249,000 சதுர கிலோமீட்டர். சீனாவில் இக்கடல் கிழக்கு கடல் என்று அறியப்படுகிறது. கொரியாவில் இது சிலவேளைகளில் தெற்கு கடல் எனப்படுகிறது எனினும் இது பெரும்பாலும் கொரியாவை ஒட்டியுள்ள கடலின் தெற்குப் பகுதியையே குறிக்கும்.