உள்ளடக்கத்துக்குச் செல்

கார்லொசு சிலிம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கார்லொஸ் சிலிம்
Carlos Slim
கார்லொசு சிலிம், அக்டோபர் 24, 2007
பிறப்புசனவரி 28, 1940 (1940-01-28) (அகவை 84)
மெக்சிக்கோ நகரம், மெக்சிக்கோ
தேசியம்மெக்சிக்கன்
படித்த கல்வி நிறுவனங்கள்மெக்சிக்கோ தேசியப் பல்கலைக்கழகம்
பணிடெல்மெக்ஸ், டெல்செல், அமெரிக்கா மோவில் ஆகியவற்றின் நிருவாக இயக்குநர், தலைவர்
சொத்து மதிப்புUS$73 பில்லியன் (2013).[1].
சமயம்மரொனைட்டு கத்தோலிக்கம்[2]
வாழ்க்கைத்
துணை
சௌமயா டோமிட் (19671999)

கார்லொசு சிலிம் எலூ (Carlos Slim Helú, பிறப்பு: சனவரி 28, 1940), என்பவர் மெக்சிக்கோவைச் சேர்ந்த பொறியாளரும், வர்த்தகரும் கொடையாளியும் ஆவார். இவர் தொலைத்தொடர்பு வணிகத்தில் பெருமளவு ஈடுபட்டுள்ளார். இவர் தற்போது (2013 இல்) உலகின் முதலாவது பணக்காரர் என்ற நிலையை எட்டியுள்ளார். இவரது சொத்துக்களின் மதிப்பீடு 73பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்[1].

கார்லொசு சிலிம் மெக்சிக்கோ மட்டுமல்லாமல், இலத்தீன் அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகளில் தொலைத்தொடர்பு வணிகத்தில் பெரும் செல்வாக்குடையவர். மெக்சிக்கோவின் தொலைபேசி நிறுவனங்களான டெல்மெக்ஸ், டெல்செல், அமெரிக்கா மோவில் ஆகிய நிறுவனங்கள் இவரது கட்டுப்பாட்டில் உள்ளன. தனது நிறுவனங்களில் இவர் மிகவும் ஈடுபாட்டுடன் செயற்பட்டுக் கொண்டிருந்தாலும், இவரது கார்லொசு, மார்க்கோ அந்தோனியோ, பட்ரிக் ஆகிய மூன்று மகன்களும், அந்நிறுவனங்களின் நாளாந்த அலுவல்களைக் கவனிக்கின்றனர்.

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்லொசு_சிலிம்&oldid=2714825" இலிருந்து மீள்விக்கப்பட்டது