உள்ளடக்கத்துக்குச் செல்

காரைக்குடி புத்தகக் கண்காட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காரைக்குடி புத்தகக் கண்காட்சி என்பது தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடி நகரில் ஆண்டுதோறும் நடத்தப்படும் ஓர் புத்தகக் கண்காட்சியாகும். இப்புத்தகக் கண்காட்சியில் தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு புத்தக வெளியீட்டாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுடன், இந்தியாவின் முக்கிய பதிப்பகங்கள் சிலவும் கலந்து கொள்கின்றன. இக் கண்காட்சியில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விநாடி-வினா, கட்டுரை, பேச்சு, பாடல் உள்ளிட்ட போட்டிகள் போன்றவை நடத்தப் பெறுகின்றன. தினமும் மாலையில் பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப் பெறுகின்றன.