கர்னால் முகல் பாலம்
கர்னால் முகல் பாலம் (Mughal Bridge) என்பது ஷாஜகானால் கர்னால் எனும் இடத்தில் கட்டப்பட்ட பாலம் ஆகும்.[1]
வரலாறு
[தொகு]இந்தப் பாலத்திற்கான அடிக்கல்லானது முகலாயப் பேரரசர் பாபரால் முதலாம் பானிபட் போரில் அவரது வெற்றிக்குப் பின் நாட்டப்பட்டது.[2]இந்தப் பாலமானது அக்பர் காலத்தின் கட்டுமானப் பொறியியல் திறனுக்கான உதாரணம் ஆகும்.[2]வார்ப்புரு:Contradict-inline இந்தப் பாலமானது 17ஆம் நுாற்றாண்டில் பயணிகளை ஈர்ப்பதற்காக பயன்பட்டது. இது பாத்சாகி புல் என்றும் அழைக்கப்பட்டது.[3]இந்தப் பாலமானது பழைய பாத்சாகி பாலம் என்றும் அழைக்கப்பட்டது. இந்தப் பாலமானது கி.பி. 1540-44 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டது. இது தேசிய நெடுஞ்சாலை 1 இற்கு அருகில் அமைந்துள்ளது.
கட்டுமானம்
[தொகு]இது கட்டுமான வடிவியலின் அடிப்படையில் பலமானதாகும். இது கற்களால் ஆன மூன்று வளைவுகளைக் கொண்டுள்ளது. இந்தப் பாலத்தில் நான்கு குவிமாட வடிவ கூரைகளைக் கொண்டதாக உள்ளது. இந்தக் குவிமாடங்களானவை முட்டுச்சுவர்கள் மற்றும் வளைவுகளால் பலம் வாய்ந்ததாக உள்ளன. இந்தப் பாலமானது அரியானா அரசால் பாதுகாக்கப்படுகிறது. இது இடிந்து தகரக்கூடிய நிலையில் இன்னும் உள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Haryana (India) (1976). Haryana District Gazetteers: Karnal (in ஆங்கிலம்). Haryana Gazetteers Organization.
- ↑ 2.0 2.1 Singh, Sarban; Organisation, Haryana (India) Gazetteers (2001). Haryana State Gazetteer: Lacks special title (in ஆங்கிலம்). Haryana Gazetteers Organisation, Revenue Department.
- ↑ "Religion and Architecture" (PDF). shodhganga.inflibnet.ac.in. பார்க்கப்பட்ட நாள் 2018-12-20.