கர்ட் திரேயர்
கர்ட் திரேயர் (Kurt Dreyer) என்பவர் செருமனிய-தென்னாப்பிரிக்க சதுரங்க மாசுட்டர் ஆவார். இவர் 1909 ஆம் ஆண்டு சூலை 31 ஆம் நாள் செருமனியிலுள்ள பிலீபில்டில் பிறந்தார். நாட்டின் நாசி கொள்கைகள் காரணமாக திரேயர் செருமனியில் இருந்து தென்னாப்பிரிக்காவிற்கு குடிபெயர்ந்தார். 1937 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவின் சதுரங்க சாம்பியனாகத் திகழ்ந்தார். 1947 ஆம் ஆண்டில் உல்ப்காங்க் எய்டன்பெல்டுடன் கூட்டாக சாம்பியன் அந்நாட்டின் சாம்பியன் பட்டத்தை வென்றார். டப்லினில் 1957 ஆம் ஆண்டில் நடைபெற்ற போட்டியில் இவர் 15 ஆவது இடத்தைப் பிடித்தார். அப்போட்டியை லுதெக் பச்மேன் வென்றார்[1]. இவா திரேயர் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்ட இவருக்கு பிராங்க் மற்றும் கென்னத் திரேயர் என்ற இரண்டு குழந்தைகள் பிறந்தனர். 1958 ஆம் ஆண்டு மியூனிக், 1964 இல் டெல் அவீவ், 1966 அவானா 1970 இல் சிகென் நகரங்களில் நடைபெற்ற சதுரங்க ஒலிம்பியாடு போட்டிகளில் தென்னாப்பிரிக்காவின் சார்பாக இவர் போட்டியிட்டார்[2]. 1981 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29 ஆம் நாள் தென்னாப்பிரிக்காவின் யோகன்னசுபர்க்கில் இவர் காலமானார்.