கண்ணின்றன்னமைவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கண்ணின்றன்னமைவு என்பது கண்ணின் பார்வைத்திறன் தெளிவாக இருக்கும்படி கண் வில்லை ஒளிமூலத்தின் தொலைவிற்கு ஏற்றவாறு அதன் குவி அமைப்பை மாற்றி அமைத்துக்கொள்வதாகும்.[1]

செயலியல்[தொகு]

மேலே உள்ள படம் குறை கண்ணின்றன்னமைவு மற்றும் கீலே உள்ள படம் மிகை கண்ணின்றன்னமைவு

நமது பார்வை திறன் என்பது ஒளி மூலத்தில் இருந்து வரும் ஒளிக்கற்றைகள் கண்ணின் விழிப்படலத்தில் ஊடுருவி கண் பாவை வழியாக உட்சென்று வில்லையின் மேற்பரப்பில் பட்டு ஊடுருவி அதன் குவி அமைப்பால் விழித்திரையில் விழுவதாகும். வேறுபட்ட தொலைவுகளில் உள்ள ஒளி மூலத்தில் இருந்து வரும் ஒளி அலைகளை சரியாக விழித்திரையில் விழ வைக்க கண் வில்லைகள் அதன் குவி அமைப்பை மாற்றிக்கொள்ளும் செயல்முறை கண்ணின்றன்னமைவு எனப்படும்.[2]

குறை கண்ணின்றன்னமைவு என்பது கண் வில்லை தன் குவி மேற்பரப்பை சுருக்கிக்கொள்ளும் இதனால் விலைக்கும் விழித்திரைக்கும் இடையே உள்ள இடைவெளி அதிகமாகும் இதனால் தொலைவாக உள்ள ஒளி மூலத்தின் ஒளி அலைகள் விழித்திரையில் சரியாக விழும். அதே போல மிகை கண்ணின்றன்னமைவு என்பது கண் வில்லை தன் குவி மேற்பரப்பை விரித்துக்கொள்ளும் இதனால் விலைக்கும் விழித்திரைக்கும் இடையே உள்ள இடைவெளி குறையும் இதனால் அண்மையில் உள்ள ஒளி மூலத்தின் ஒளி அலைகள் விழித்திரையில் சரியாக விழும். கண்ணின்றன்னமைவு செயல்முறை கண் வில்லையில் அன்னிச்சையாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Chen, Ai Hong; O’Leary, Daniel J.; Howell, Edwin R. (2000). "Near visual function in young children". Ophthal. Physiol. Opt. 20 (3): 185–198. doi:10.1016/S0275-5408(99)00056-3, Fig. 5. 
  2. Augen (in German), archived from the original on 2017-12-07, பார்க்கப்பட்ட நாள் 2009-05-02{{citation}}: CS1 maint: unrecognized language (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்ணின்றன்னமைவு&oldid=3237990" இலிருந்து மீள்விக்கப்பட்டது