கண்ணி (செய்யுள் உறுப்பு)
Appearance
மக்களுக்குக் கண் இரண்டு.
கண்ணைப் போல் இரண்டிரண்டு பூக்களை வைத்துத் தொடுக்கப்படும் பூமாலைக்குப் பெயர் கண்ணி.
தமிழில் பாடப்படும் பாடலில் இந்தப் பூக் கண்ணி போல் இரண்டிரண்டு அடிகள் எதுகையால் தொடுக்கப்படுவது கண்ணி.
எடுத்துக்காட்டு
[தொகு]- தாழிசையாக வரும் தனிக் கண்ணி
- சூதள வளவெனும் இளமுலைக் துடியள வளவெனும் நூண்ணிடைக்
- காதள வளவெனும் மதர்விழிகு கடலமு தனையவர் திறமினோ [1]
- தொடர்நிலையாக வரும் கண்ணி
1
- தேர்மேவு பாய்புரவிப் பாசடைச் செங்கமலம்
- போர்மேவு பாற்கடல் பூத்தனையோன் - பார்மேல்
2
- மருளப் பசுவொன்றின் மம்மர் நோய்தீர
- உருளுந் திருத்தேர் உரவோன் - அருளினால்
3
- பேராப் பெரும்பகை தீரப் பிற வேந்தர்
- ஊராக் குலிச விடையூர்ந்தோன் - சோராத்
4
- துயில்காத்து அரமகளிர் சோர்குழை காத்தும்பர்
- எயில் காத்தநேமி இறையோன் [2]
அடிக்குறிப்பு
[தொகு]- ↑ கலிங்கத்துப்பரணி பாடல் 21
- ↑ மூவருலா முதல் 4 கண்ணிகள்