உள்ளடக்கத்துக்குச் செல்

ஏவுகணை நுட்பம் கட்டுப்படுத்தும் அமைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஏவுகணை நுட்பம் கட்டுப்படுத்தும் அமைப்பு என்பது பலநாடுகள் உறுப்பு வகிக்கும் ஏவுகணை நுட்ப ஏற்றுமதியை கட்டுப்படுத்தும் அமைப்பாகும். இதில் 35 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. ஏவுகணை நுட்பம் பரவுவதை தடுப்பதும் 500 கிலோ எடையுடன் 300 கிமீ தூரம் செல்லும் ஆளில்லா வானூர்தி நுட்ப ஏற்றுமதியை தடை செய்வதும் இதன் பணியாகும். இதன் உறுப்பு நாடுகளின் பணி\செயல்பாடுகள் தன்னார்வமானது எந்த நாட்டையும் அமைப்பின் குறிக்கோளுக்கு மாறாக செயல் பட்டதென்றால் தண்டிக்கமுடியாது.

வரலாறு

[தொகு]

ஏழு பேர் குழு எனப் பொருள் தரும் ஜி7 அதாவது பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, ஜப்பான், ஐக்கிய அமெரிக்க மாநிலங்கள், ஐக்கிய இராச்சியம், கனடா ஆகியவற்றால் ஏவுகணை நுட்பம் ஏற்றுமதியாவதை தடுப்பதற்காகவும் 500 கிலோ எடைக்கு மேல் 300 கிமீ தூரம் செல்லும் செலுத்து நுட்பம் ஏற்றுமதியாவதை தடுப்பதற்காகவும் 1987 ஏப்ரல் மாதம் உருவாக்கப்பட்டது..

மேற்கோள்கள்

[தொகு]