உள்ளடக்கத்துக்குச் செல்

எரித மின்னஞ்சல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எரித மின்னஞ்சல் (email spam) என்பது ஒரே மின்னஞ்சலை பெருந்தொகையானோருக்கு, அவர்கள் கேட்காமலேயே பொருட்கள் அல்லது சேவைகளை வழங்குவதற்கு வர்த்தக நோக்கில் அனுமதியின்றி அனுப்பப்படும் மின்னஞ்சல் ஆகும். எரித மின்னஞ்சல்கள் தேவையற்ற சுமையை இணையத்தில் விடுவதால், இணையப் போக்குவரத்து கூடி பண விரயம் ஏற்படுகிறது. தனிநபர்களுக்கும் எரித மின்னஞ்சல்கள் ஒரு சிலவற்றையாவது படிப்பதில் நேர விரயம் ஏற்படுகிறது.

முதல் எரித மின்னஞ்சல்

[தொகு]

முதல் எரித மின்னஞ்சல் ஆர்பாநெட் எனும் கணினி வலைப் பின்னலில் அனுப்பப்பட்டது. மே 3 ஆம் நாள் 1978 ஆம் ஆண்டில், கேரி துர்க் என்ற ஒருவர் தனது புதிய கணினிகள் பற்றி விளம்பரம் செய்வதற்காக, 393 நபர்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினார்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. At 30, Spam Going Nowhere Soon - Interviews with Gary Thuerk and Joel Furr
"https://ta.wikipedia.org/w/index.php?title=எரித_மின்னஞ்சல்&oldid=3802364" இலிருந்து மீள்விக்கப்பட்டது