உள்ளடக்கத்துக்குச் செல்

எம். ஏ. முகம்மது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எம்.ஏ. முகம்மது
Dickwella M.A. Mohamed
பிறப்புஎம்.ஏ. முகம்மது
(1918-03-13)மார்ச்சு 13, 1918
திக்குவல்லை, இலங்கை
இறப்புசனவரி 25, 1991(1991-01-25) (அகவை 72)
இருப்பிடம்இலங்கை
பணிஆசிரியர்
சமயம்இசுலாம்

எம். ஏ. முகம்மது என அழைக்கப்படும் முகம்மது அலி முகம்மது (13 மார்ச் 1918 - 25 சனவரி 1991) இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளர், நூலாசிரியர், வானொலி நாடக எழுத்தாளர், மேடை நாடக எழுத்தாளர், மேடைநாடக நடிகர், வானொலி நாடக எழுத்தாளர் என துறைகளில் தமிழ் இலக்கியத்துக்குப் பங்காற்றியவர்.[1]

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

இலங்கை திக்குவல்லையைப் பிறப்பிடமாகக் கொண்ட முகம்மது அலி முகம்மது, அப்துல் காதிர் மரிக்கார் என்பவருக்குப் பிறந்தவர்.[1] 1940 ஆம் ஆண்டு தமிழ் ஆசிரியத் தராதரப் பத்திர பரீட்சையில் சிங்கள மொழியுடன் தேர்ச்சியடைந்தார். அவ்வாண்டு முதல் இலங்கை ஆசிரியத் தொழிலில் இணைந்தார். தென்னிலங்கையில் போலானை, நளகமை ஆகிய இடங்களில் பணியாற்றிக் கொண்டு "நிலா" என்ற புனைபெயரில் எழுத்துத் துறையிலும் ஈடுபட்டார்,[1] 1949 இல் கொழும்பு சாஹிரா கல்லூரியில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். மாணவர்களைத் தமிழ் நாடகத் துறையில் ஆர்வம் கொள்ளச் செய்வதில் உழைத்தார். ஸாஹிராக் கல்லூரியில் ஆசிரியராக இருக்கும் காலை இசை - நாடகக் குழுத் தலைவராக விளங்கினார்.[1]

முதன் முதலாக இலங்கை வானொலியில் 1950 இல் 30 நிமிட “புயல்” என்ற இவரது நாடகம் முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பாகியது.

1949 ஆம் ஆண்டு “இன்ப வாழ்வு” என்ற வானொலிப் பேச்சு முதன் முறையாக ஒலிபரப்பாகியது.

நாடகங்களுக்கான கதை, வசனம், பாடல்களை இயற்றுவதில் இளம் வயது முதலே ஆர்வம் காட்டினார். இஸ்லாமிய கலைத் துறைக்குப் பெரும் பங்காற்றியுள்ள எம்.ஏ. முகம்மது, சோனக இஸ்லாமிய கலாசார நிலையத்துக்காக மேடையேற்றிய “இலங்கைக்கு அராபியர்களின் வருகை” பெரும் வரவேற்பைப் பெற்றதாகும்.

சிங்கள வானொலி முஸ்லிம் சேவைக்காக வாரந்தோறும் இஸ்லாமிய நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்குவதிலும் பெரும் பங்காற்றியு்ளளார்.

5000 இற்கும் அதிகமான சிங்கள, தமிழ்ப் பாடல்களை எழுதிய பெருமைக்குரியவர்.[சான்று தேவை] 2000 இற்கும் அதிகமான சிங்கள, தமிழ் நாடகங்களை எழுதி இயக்கியுள்ளார்.[சான்று தேவை] அவரே நாடகங்களை மேடையேற்றியுமுள்ளார்.

1986 களில் தான் ஆசிரியப் பணியிலிருந்து ஓய்வு பெற்றது முதல் கவிதை எழுவதை தனது முழுநேரப் பணியாக்கிக் கொண்டவர் எம். ஏ முகம்மது.

1978 முதல் இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராக நியமிக்கப்பட்டார்.[சான்று தேவை]

எழுதிய சில நூல்கள்

[தொகு]
  • சுறாவளி (ஈழத்து முஸ்லிம்களுக்காக வெளியிடப்பட்ட முதல் நாடக நூல்)
  • இஸ்லாம் இதிகாசய (மாணாக்கருக்கான சிங்கள நூல்)
  • இஸ்லாம் தர்மய (மாணாக்கருக்கான நூல்)
  • சூறா யாஸீன் - தமிழ் விளக்கம்
  • துஆ கன்சுல் அர்ஷ் - தமிழ் விளக்கம்
  • அஸ்மாஉல் ஹுஸ்னா - தமிழ் விளக்கம்

எழுதிய நாடங்களுள் பேர் பெற்றவை

[தொகு]
  • அபிமானய
  • ஹர்த சாக்கிய
  • புயல் - இலங்கை வானொலியில் ஒலிபரப்பாகிய முதல் நாடகம்

விருதுகள்

[தொகு]
  • 1964.10. 04 ஆம் திகதி கிண்ணியாவில் நடைபெற்ற அகில இலங்கை இஸ்லாமியக் கலை இலக்கிய விழாவில் 15 ஆண்டு நாடகத் துறைப் பங்களிப்புக்காக பாராட்டும் விருதும் பெற்றார்.[சான்று தேவை]

உபயம்

[தொகு]
  • தியாகி இதழ் பக்கம் - 50
  • தினகரன் பத்திரிகைச் செய்தி

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 திக்குவல்லை ஸப்வான்(2002). "கலையரசு மர்ஹும் எம். ஏ. முஹம்மத்". உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு கொழும்பு சிறப்பு மலர் 2002, பக். 182-189, கொழும்பு:இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._ஏ._முகம்மது&oldid=2716395" இலிருந்து மீள்விக்கப்பட்டது