உள்ளடக்கத்துக்குச் செல்

ஊசுடேரி பறவைகள் சரணாலயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஊசுடேரி பறவைகள் சரணாலயம் அல்லது ஊசுடு ஏரி பறவைகள் சரணாலயம் (Ousteri Bird Sanctuary or Oussudu Lake Bird Sanctuary) என்பது புதுவையில் உள்ள பழமையான ஏரியான ஊசுடு ஏரியில் அமைந்துள்ளது ஆகும். இந்த ஏரி 2008-இல் பறவைகள் சரணாலயமாக புதுச்சேரி அரசால் அறிவிக்கப்பட்டது.

ஊசுடு ஏரி

[தொகு]

இந்த ஏரி காவேரி நதியின் வடக்கே புதுவையில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இது கிட்டத்தட்ட 390 ஹெக்டேர் பரப்பளவுடையது. இந்த ஏரிக்கு சோழ மன்னன் கோப்பெருஞ்சிங்கன் மதகுகளும் கால்வாய்களும் கட்டினான் என்று திருவக்கரைக் கோயில் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. இந்த ஏரி புதுச்சேரியிலிருந்து மேற்கே 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. ஏரியின் மொத்த நீர்ப்பிடிப்புப் பகுதி 15.54 சதுர கி.மீ. ஏரிக் கரையின் மொத்த நீளம் 7.2 கி.மீ. மொத்தக் கொள்ளளவு 54 கோடி கனஅடி. சங்கராபரணி ஆறு, வீடூர் அணையிலிருந்து ஊசுட்டேரிக்கு நீர் வருகிறது. மேலும் சுத்துக்கேணி கால்வாய் மூலம் செஞ்சியாற்றிலிருந்தும் ஏரிக்குப் பெருமளவில் நீர் வருகிறது. இதனால் பாசன வசதிபெறும் நிலங்கள் தோராயமாக 1,500 ஹெக்டேர்.[1]

நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை உலகம் முழுவதிலும் இருந்து இங்கு பறவைகள் படையெடுக்கும். சில பறவைகள் இனபெருக்கம் செய்ய ஏற்ற சூழ்நிலை இங்கு உள்ளது.

2008 ஆம் ஆண்டு புதுவை அரசு இந்த ஏரியை பறவைகள் சரணாலயமாக அறிவித்தது .800 ஹெக்டர் பரப்பளவு கொண்ட இந்த எரி புதுவை பகுதியில் 390 ஹெக்டரும் தமிழக பகுதியில் 410 ஹெக்டரும் உள்ளது .இங்கு காணப்படும் பறவைகள் சிலவற்றின் பட்டியில் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.

இந்த நன் நீர் ஏரியில் உள்ள பல நீர்த் தாவரங்கள்( பெருநிலைத் தாவரம்) பறவைகள் உணவை கொள்கின்றன .

  • சராசரி கடல் மட்டத்தில் இருந்து சுமார் 15 மீட்டர் மேட்டில் அமைந்து உள்ளது .
  • ஆண்டின் சராசரி அதிகபட்ச வெப்ப நிலை -33.1 செல்சியஸ்
  • ஆண்டின் சராசரி குறைந்தபட்ச வெப்ப நிலை - 24.1 செல்சியஸ்
  • ஆண்டின் மொத்த மழைப் பொழிவு அளவு - 1338 மில்லிமீட்டர்
  • பட்டாம் பூச்சி பலவகைகள் இங்கு உள்ளன .

பறவைகள் பட்டியல்

[தொகு]
  • பூநாரை
  • நத்தை குத்தி நாரை
  • மஞ்சள் மூக்கு நாரை
  • உண்ணிக்கொக்கு
  • கரண்டிவாயன்
  • குள்ளத்தாரா
  • காட்டு வாத்து
  • பட்டைத்தலை வாத்து
  • கருநீர்க்கோழி
  • சாதாரண மைனா
  • நீலச்சிறகி
  • அன்னம்
  • வெண்தலை சிலம்பன்(பன்றிக்குருவி )
  • குளத்துக் கொக்கு
  • தட்ட வாயன்
  • ஊசிவால் வாத்து
  • சாம்பல் கூழைக்கடா
  • குயில்

புகைப்படங்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. செ. ஞானபிரகாஷ் (25 நவம்பர் 2017). "பற… பற… புதுவைப் பறவைகள்!". கட்டுரை. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 2 திசம்பர் 2017.

வெளி இணைப்புகள்

[தொகு]