உஷாதேவி போசுலே
உஷாதேவி நரேந்திர போசுலே (Ushadevi Bhosle) இந்தியக் கணிதவியலாளர், கல்வியாளர் மற்றும் ஆராய்ச்சியாளர் ஆவார். இவர் இயற்கணித வடிவியலில் நிபுணத்துவம் பெற்றவர்.[1] இவர் மூட்டைகளின் மாடுலி இடைவெளிகளில் ஆய்வு செய்தார்.[1]
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி
[தொகு]போசுலே 1969-ல் இளமறிவியல் பட்டமும் முதுநிலைப் பட்டத்தினை 1971-ல் முறையே புனே பல்கலைக்கழகம், சிவாஜி பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பெற்றார்.[1] டாட்டா அடிப்படை ஆராய்ச்சிக் கழகத்தில் 1971-ல் முதுநிலை படிப்பைத் தொடங்கிய போசுலே 1980-ல் தனது ஆய்வு வழிகாட்டியான எஸ். இரமணனின் வழிகாட்டுதலின் கீழ் முனைவர் பட்டம் பெற்றார்.[1]
பணி
[தொகு]1971 முதல் 1974 வரை டாட்டா அடிப்படை ஆராய்ச்சி கழகம் ஆராய்ச்சி உதவியாளராகத் தனது ஆராய்ச்சி வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் 1974 முதல் 1977 வரை டாட்டா அடிப்படை ஆராய்ச்சிக் கழகத்தில் ஆய்வு இணையர் II-வாக ஆனார். பின்னர், இதே நிறுவனத்தில் 1977-1982-ல் ஆராய்ச்சியாளராகவும், 1982-1990-ல் உறுப்பினராகவும், 1991-1995-ல் ஆசிரியராகவும் ஆனார். டாட்டா அடிப்படை ஆய்வு நிறுவனத்தில்1995 - 1998 வரை இணைப் பேராசிரியராகவும், 1998-2011 வரை பேராசிரியராகவும், 2012-2014-ல் மூத்த பேராசிரியராகவும் பணியாற்றினார்.
போசுலே பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தில் ராஜா ராமண்ணா சகாவாக 2014 - 2017 வரை பணியாற்றினார். இவர் சனவரி 2019 முதல் பெங்களூரில் உள்ள இந்தியப் புள்ளியியல் நிறுவனத்தில் இந்தியத் தேசிய அறிவியல் கழக மூத்த அறிவியலாளர் ஆனார்.
உறுப்பினர்
[தொகு]போசுலே அறிவியல் கழகம், தேசிய அறிவியல் கழகம், பன்னாட்டுத் தேசிய அறிவியல் கழகம் மற்றும் வி. பி. ஏ. சி. உள்ளிட்ட பன்னாட்டு அமைப்புகளில் உறுப்பினராக உள்ளார்.[1] போசுலே இத்தாலியின் கோட்பாட்டு இயற்பியல் பன்னாட்டு மையத்தின் மூத்த துணையாளராகவும் இருந்தார்.[1] போசுலே இந்தியத் தேசிய அறிவியல் அகாதமி, தில்லி, இந்திய அறிவியல் அகாதமி, பெங்களூர் மற்றும் இந்தியாவின் அலகாபாத்தில் உள்ள தேசிய அறிவியல் அகாதமி ஆகியவற்றின் சக உறுப்பினராக இருந்தார்.[2][3][1]
ஆய்வுக் கட்டுரைகள்
[தொகு]போசுலே இதுவரை 66 ஆய்வுக் கட்டுரைகள் வெளியிட்டுள்ளார்.
விருதுகளும் கௌரவங்களும்
[தொகு]போசுலேக்கு 2010-ல் ஸ்திரீ சக்தி அறிவியல் சம்மான் மற்றும் இராமசுவாமி அய்யர் நினைவு விருது 2000-ல் வழங்கப்பட்டது.[1]
வாழ்க்கை
[தொகு]போசுலே கணிதம் தவிர, இவரது வரைதல், ஓவியம், வாசிப்பு மற்றும் இசையில் ஆர்வமுடையவர். போசுலே தற்போது, மும்பையில் வசிக்கிறார்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 1.8 "INSA :: Indian Fellow Detail". insaindia.res.in. Archived from the original on 2019-02-16. பார்க்கப்பட்ட நாள் 2019-02-16.
- ↑ "The National Academy of Sciences, India - Founder Members". Nasi.org.in. Archived from the original on 16 அக்டோபர் 2014. பார்க்கப்பட்ட நாள் 14 October 2018.
- ↑ "INSA". Archived from the original on 12 August 2016. பார்க்கப்பட்ட நாள் 13 May 2016.