உறந்தைவளர் நாட்டுவளப்பம் (நூல்)
Appearance
முதற்பக்க அட்டை | |
நூலாசிரியர் | முத்தையன் சேதிராயர் |
---|---|
பட வரைஞர் | அ. நக்கீரன் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பொருண்மை | நாட்டுப்புற இலக்கியம் |
வகை | இலக்கியம் |
வெளியீட்டாளர் | சிம்புள் கணினி, அன்னம் மறுதோன்றி அச்சகம் |
வெளியிடப்பட்ட நாள் | சூன், 1997 |
ஊடக வகை | மென்னட்டை |
பக்கங்கள் | 100 பக்கங்கள் |
உறந்தைவளர் நாட்டுவளப்பம் என்பது முத்தையன் சேதிராயர் எழுதிய நூல். இவர் கல்லாதவர் எனவும் இவர் பாடிய பாடல்களை இவர் தம்பி குறித்து வைத்துக் கொண்டு, ஏட்டில் எழுதியதாகவும், பின்னர் அதைத் தாம் பிழைத் திருத்தி நூலாக வெளியிட்டதாகவும் நக்கீரர் கூறுகிறார். ஒரத்தநாடு வட்டத்தின் உள்ளூர் மக்களின் வாழ்வியல். வழிபாட்டு முறைகள், பண்பாடு, சாதிப் பிரிவுகள் ஆகியவற்றை எழுதியுள்ளார். முத்தையன் பாடிய சந்தம் கொண்ட பாடல்களுக்கு உரைநடையிலும் விளக்கியுள்ளார் நக்கீரர். சில தகவல்களுக்கு ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார். பிற நூலாசிரியர்களின் சான்றுகள் ஆங்காங்கே எடுத்தாளப்பட்டுள்ளன. இந்த சுற்றுப்புறத்து ஊர்களின் சென்ற நூற்றாண்டின் வாழ்வியலை அறிய முடிகிறது.