உள்ளடக்கத்துக்குச் செல்

உயிரியல் மதிப்பீடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உயிரியல் மதிப்பீடு (Bioassay) அறிவியல் ஆய்வு முறைகளுள் ஒன்று. ஒரு வேதிப்பொருள் ஒரு குறித்த உயிரினத்தில் அல்லது பிரித்தெடுக்கப்பட்ட உயிரின செல்களில் ஏற்படுத்தும் விளைவுகளை மதிப்பிடுதலே உயிரியல் மதிப்பீடு ஆகும். புதிய மருந்துகளை உருவாக்குதல், சுற்றுச் சூழல் மாசுபடுத்திகளின் விளைவை அறிதல் போன்ற பல காரணங்களுக்காக உயிரியல் மதிப்பீட்டு ஆய்வுகள் நிகழ்த்தப்படுகின்றன.

உயிரியல் மதிப்பீடு பண்பறிதல்(qualitative) சோதனையாகவோ அல்லது அளவறிதல்(quantitative) சோதனையாகவோ இருக்கலாம்.


"https://ta.wikipedia.org/w/index.php?title=உயிரியல்_மதிப்பீடு&oldid=2745475" இலிருந்து மீள்விக்கப்பட்டது