உள்ளடக்கத்துக்குச் செல்

இராபர்ட்டு ஓவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராபர்ட்டு ஓவன்
Robert Owen
50-வது அகவையில் ஓவன்
பிறப்பு(1771-05-14)14 மே 1771
நியூடவுன், வேல்சு
இறப்பு17 நவம்பர் 1858(1858-11-17) (அகவை 87)
நியூடவுன், வேல்சு
பணிசமூச சேவையாளர், தொழிலதிபர், கண்டுபிடிப்பாளர்
பெற்றோர்இராபர்ட் ஓவன், ஆன் வில்லியம்சு[1]
வாழ்க்கைத்
துணை
கெரொலைன் டேல்
பிள்ளைகள்ஜேக்சன் (1799)
இராபர்ட் டேல் (1801)
வில்லியம் (1802)
ஆன் கெரொலைன் (1805)
ஜேன் டேல் (1805)
டேவிட் டேல் (1807)
இரிச்சார்டு டேல் (1809)
மேரி (1810)

இராபர்ட்டு ஓவன் (14 மே 1771 – 17 நவம்பர் 1858) ஒரு வேல்சு குமுகச் சீர்திருத்தவாதியும் கருத்தியல் செவ்விய சோசலிசம் (Utopian socialism), கூட்டுறவு இயக்கம் ஆகியவற்றைத் தோற்றுவித்தவர்களில் ஒருவரும் ஆவார். இவர் 1824 இல் அமெரிக்காவுக்குச் சென்று, அங்கு தான் ஈட்டிய பொருளைக்கொண்டு இண்டியானா மாநிலத்தில் தென்கோடியில் வபாசு ஆற்றுப்படுக்கையில் 1000 பேர் கொண்ட உயரிய கருத்தியல் குமுகமாக நியூ ஆர்மனி என்னும் ஒன்றை நிறுவினார்.

வாழ்க்கை வரலாறு

[தொகு]

இராபர்ட்டு ஓவன் நடு இசுக்காட்லாந்தில் உள்ள நியூடவுன் என்னும் 1771ம் ஆண்டு பிறந்தார். அவர் பெற்றோருக்குப் பிறந்த ஏழு குழந்தைகளில் இவர் ஆறாவது குழந்தையாவார்.

டேவிட் டேல் என்ற மில் உரிமையாளரின் மகள் கரோலின் டேலை திருமணம் செய்து கொண்ட பிறகு அந்த ஆலையின் மேலாளராகவும் பகுதி உரிமையாளராகவும் செயல்பட்டார்.

ஓவன் ஆலையின் நிருவாகத்தில் பல சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தினர். தொழிலாளிகளுக்குச் சம்பளத்தைப் பணமாகத் தராமல் பற்றுச் சீட்டுகளாகவும், பொருளாகவும் தந்து வந்த திரக்கு முறை (truck system) எனப்படும் முறையை மேம்படுத்தி மொத்த விலையில் பொருட்களை வாங்கித் தொழிலாளர்களுக்கு கொடுக்கும் கூட்டுறவு முறையை ஏற்படுத்தினார். சிறு குழந்தைகளுக்கு தொழிற்சாலை பராமரிப்பு அளிக்கும் முறையை உருவாக்கினார்.

உசாத்துணை

[தொகு]

= வெளி இணைப்புகள்

[தொகு]
  1. "Robert Owen." Encyclopaedia Britannica. Encyclopaedia Britannica Online Academic Edition. Encyclopædia Britannica Inc., 2014. Web. 9 சனவரி 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராபர்ட்டு_ஓவன்&oldid=3858212" இலிருந்து மீள்விக்கப்பட்டது