உள்ளடக்கத்துக்குச் செல்

இராதா வேம்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிறப்பு1972/1973 (அகவை 51–52)[1]
தேசியம்இந்தியர்
கல்விஇந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை
அறியப்படுவதுசோகோ கழகம் பெரும்பான்மையான பங்குகள்
சொந்த ஊர்சென்னை, இந்தியா
சொத்து மதிப்புUS$1.2 பில்லியன் (சூன் 2020)[1]

இராதா வேம்பு (Radha Vembu) என்பவர் ஓர் இந்திய கோடீசுவரர், சென்னையில்[1] வசித்து வரும் இவர் தொழிலதிபராகவும் இந்திய மென்பொருள் மேம்பாட்டு நிறுவனமான சோகோ கார்ப்பரேசன் நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளின் உரிமையாளராகவும் உள்ளார்.

சென்னையிலுள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் வேம்பு தொழில்துறை நிர்வாகப் பிரிவில் பட்டம் பெற்றுள்ளார்.[1]

சோகோ கார்ப்பரேசன் இவரது சகோதரர் சிறீதர் வேம்புவுடன் இணைந்து நிறுவப்பட்டது. சிறீதர் 1996 ஆம் ஆண்டில் அட்வென்ட்நெட்[1] என்ற பெயரில் வணிகத்தைத் தொடங்கினார். நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை வேம்பு வைத்திருக்கிறார். மின்னஞ்சல் சேவைக்கான தயாரிப்பு மேலாளராகவும் சோகோ மின்னஞ்சல் மற்றும் கார்பசு அறக்கட்டளையின் இயக்குனராகவும் இவர் உள்ளார்.[2] ஊடகங்களை தவிர்த்து பொதுவெளியிலிருந்து விலகியும் இருக்கிறார். [3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "Forbes profile: Radha Vembu". Forbes. பார்க்கப்பட்ட நாள் 24 June 2020.
  2. Sachmechi, Natalie. "Meet the World's 178 Newest Billionaires". https://www.forbes.com/sites/nataliesachmechi/2020/04/07/meet-this-years-newest-billionaires-178-newcomers-worth-369-billion/. பார்த்த நாள்: 24 May 2020. 
  3. Gupte, Masoom. "Kiran Mazumdar Shaw, Radha Vembu in Hurun global self-made female billionaires list". https://economictimes.indiatimes.com/magazines/panache/kiran-mazumdar-shaw-radha-vembu-in-hurun-global-self-made-female-billionaires-list/articleshow/74826220.cms. பார்த்த நாள்: 25 May 2020. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராதா_வேம்பு&oldid=3946271" இலிருந்து மீள்விக்கப்பட்டது