உள்ளடக்கத்துக்குச் செல்

இராஜேஷ் யங்கரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராஜேஷ் யங்கரன்
சட்னி இசை நிகழ்ச்சியில் இராகேஷ் யங்கரன்.
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்இராஜேஷ் யங்கரன்
பிற பெயர்கள்தி இராஜா
பிறப்புதிசம்பர் 3, 1959 (1959-12-03) (அகவை 65) [1]
ப்ரிக்பீல்ட், கராபிசைமா, டிரினிடாட் மற்றும் டொபாகோ
பிறப்பிடம்மத்திய டிரினிடாட்
இசை வடிவங்கள்சட்னி இசை, பஜனைகள், கீர்த்தனை, இந்திய பாரம்பரிய இசை, இந்திய நாட்டுப்புற இசை
தொழில்(கள்)பாடகர்
இசைக்கருவி(கள்)பாடுதல், ஆர்மோனியம், தோலக், கைம்முரசு இணை, தண்டால்
இசைத்துறையில்1974- தற்போது வரி
வெளியீட்டு நிறுவனங்கள்பிரைம்சிங் புரொடக்ஷன்ஸ்
இணைந்த செயற்பாடுகள்இரசிகா டிண்டியல், இரவி பி, இரேமண்ட் இராம்நரைன்

இராகேஷ் யங்கரன் (Rakesh Yankaran) இராஜா [2] என்ற புனைபெயர் கொண்ட இவர் ஓர் விருது பெற்ற இந்தோ-டிரினிடாடியன் இசைக்கலைஞர் ஆவார். இவர் மறைந்த இந்திய பாரம்பரிய இசைக்கலைஞர் ஐசக் யங்கர்ரனின் மகனும், மறைந்த சட்னி எனப்படும் இந்தோ-கரீபியன் இசைக்கலைஞர்களான ஆனந்த் யங்கரன் மற்றும் சர்ம் யங்கரன் ஆகியோரின் சகோதரரும் ஆவார். இவரது தாத்தா இந்தியாவின் ஆந்திராவிலிருந்து டிரினிடாட் மற்றும் டொபாகோவுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு சென்ற தொழிலாளர்கள் காலங்களில் வந்தார்.[3] இவர் சுயமாகக் கற்றுக் கொண்ட இசைக்கலைஞர் ஆவார். ஒரு குழந்தையாக, இளம் இராகேஷ் தனது தந்தை பாடுவதைக் கேட்பதை விரும்பினார். தனது பதின்வயதிலேயே இவர் இசையை இசைக்கத் தொடங்கினார். இன்று இவர் ஒரு தொழில்முறை சட்னி இசைக் கலைஞராவார். இவர் இந்திய கருவிகளான கைம்முரசு, தோலாக், ஆர்மோனியம், தண்டல் மற்றும் தஸ்ஸா மேளம் போன்றவற்றை இசைக்கத் தெரிந்தவர்.

இராகேஷ் யங்கரன் டிரினிடாட் மற்றும் டொபாகோவில் பிறந்த தெலுங்கு மற்றும் போஜ்புரி இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவராவார்.[4] இவர் 1974 இல் தனது இசை வாழ்க்கையைத் தொடங்கினார். ஆனால் முதன்முதலில் 1991 ஆம் ஆண்டில் ததியா மோடே லே லே என்ற பாடலுக்காக தேசிய பாராட்டைப் பெற்றார். மற்ற வெற்றிகளில் மௌசி, துலாஹின் சாலே சசுரல் மற்றும் நரோரோ ரே ஆகியவை அடங்கும். இவர் 1996 மற்றும் 1997 ஆம் ஆண்டுகளில் தேசிய சட்னி மோனார்க் போட்டியில் வென்றுள்ளார்.[2] மேலும், 2008, மற்றும் 2008 இல் தேசிய பாரம்பரிய சட்னி எனப்படும் இந்தோ-கரீபியன் இசை வகையில் மன்னரானார்..

குறிப்புகள்

[தொகு]
  1. https://m.youtube.com/watch?v=XONzJ-e8pt8
  2. 2.0 2.1 Boodan, Adrian (10 December 2008). "Yankaran reigns as Chutney king". Trinidad and Tobago Guardian. Archived from the original on 18 March 2011. பார்க்கப்பட்ட நாள் 22 January 2010.
  3. "Arrival Day: 103 FM pays tribute to Isaac Yankaran". Newsday.co.tt. பார்க்கப்பட்ட நாள் 2019-08-25.
  4. The Untold Story of Waterloo: As the Centre of Indian Spirituality.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராஜேஷ்_யங்கரன்&oldid=3448425" இலிருந்து மீள்விக்கப்பட்டது