இரட்டைக் குவியக்கண்ணாடி
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
இரட்டைக் குவியக்கண்ணாடி (Bifocals) என்பது ஒவ்வொரு கண்ணுக்கும் இரண்டு குவியாடிகளைக் பொருத்திப் பார்ப்பதற்கு உதவி செய்யும் ஒரு கருவியாகும். ஒரு பொருளின் மீது தமது கண்களைத் தெளிவாகக் குவியப்படுத்தி, பொருள்களைத் தெளிவாகக் காணும் திறமை முதுமையடைய அடையக் குறையும். இதற்கு “பிரிஸ்பைபோபியா” (Prisbyobia) என்று பெயர். முதியவர்கள் ஏன் புத்தகம் படிக்கும் பொழுது சிறிது தள்ளி வைத்து படிக்கின்றனர் என்பதற்கு இது தான் காரணம். கண்ணாடியில் கீழ் பகுதியில் உள்ள ஆடி இந்த பிரிஸ்பைபோபியா என்னும் குறைபாட்டை சரி செய்யும் பகுதியாகும். இது அருகில் உள்ள பொருட்களின் மீது பார்வை குவியும் தன்மையைச் சரிசெய்து பார்வை நன்றாகத் தெரிய உதவுகிறது.
வரலாறு
[தொகு]அமெரிக்க அரசியல் மேதை பெஞ்சமின் பிராங்களின் இதைக் கண்டுபிடித்தாகக் கூறப்பட்டாலும் இதனை யார் எப்பொழுது கண்டுபிடித்தார்கள் என்று அறுதியிட்டுக் கூறச்சான்றில்லை. 1760 ஆம் ஆண்டு துவங்கி பெஞ்சமின் பிராங்களினும் மற்றவர்களும் இக்கண்ணாடியை அணிந்திருக்கலாம். ஜார்ஜ் வாட்லி (George whatley), அமெரிக்க அரசிதழ் (gazette of United states) ஆசிரியர் ஜான் பென்னோவிற்கு (John Fenno) எழுதிய கடிதத்தில் பெஞ்சமின் பிராங்களின் இரட்டைக் குவியக்கண்ணாடியைக் கண்டுபிடித்தாகத் தெரிவித்துளார்.[1]. பெஞ்சமின் பிராங்களினுக்குக் கண்பார்வையில் குறைவிருந்தது. இது குறித்து அவருடைய அறிவியல் ஞானத்தாலும் இந்தக் குறையின் தன்மை அறிந்து இரட்டைக்குவியக் கண்ணாடியைப் பயன்படுத்தி இது குறித்து அவர் விளம்பரம் செய்திருக்கலாம்.[2]
பிராங்களின் அணிந்திருந்த இரட்டைக் குவியக்கண்ணாடியில் ஒவ்வொரு கண்ணின் ஆடிகளும் இரண்டும் தனித்தனி பகுதிகளாக இருந்தன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் லுயி டி வீக்கர் (Louis de weeker) (1832-1906) இரண்டு பகுதிகளையும் ஒன்றாக இணைக்கும் வழியை கண்டுபிடித்தார். இரட்டைக்குவியக் கண்ணாடி என்னும் சொல்லை முதலில் 1826 ஆம் ஆண்டு ஜான் ஐசக் காக்கின்சு (John Isaac Hawkins) (1772-1854) என்பவர், தாம் அறிமுகப்படுத்திய மூன்று கண்ணாடி வில்லைகளை வேறுபடுத்திக் காண்பிப்பதற்காகப் பயன்படுத்தினார். வயதானவர்கள் அருகிலுள்ள பொருட்களையும், சிறிது தூரத்தில் இருந்த பொருட்களையும் காணமுடியாமலிருந்த குறைபாட்டை காக்கின்சின் இந்த மூன்று குவியக்கண்ணாடி சரி செய்தது.[2] பிற்காலத்தில் 1950 களுக்குப் பின் கண்ணாடிகள் இரண்டு, மூன்று குவியல்கள் அல்லாமல் பல குவியல்களுடன் வரத் தொடங்கின. 1955 ஆம் ஆண்டு யங்கர் ஆப்டிக்சு நிறுவனத்தைச் சேர்ந்த இர்விங் ரிப்சு (Irwing Rips) என்பவர் பல பார்வை சக்தி கொண்ட கண்ணாடியை உருவாக்கினார்.[3] இதுவே பிற்காலத்தில் வளர்வீரிய கண்ணாடி வில்லை (Progressive lens) தயாரிப்பதற்கு முன்னோடியாக இருந்தது.
அமைப்பு
[தொகு]முதலில் இரண்டு கண்ணாடி வில்லைகளைப் பாதியாக அறுத்து அவற்றை ஒரு சட்டத்தில் மாட்டிப் பயன்படுத்தி வந்தனர். இது போன்று இரண்டு கண்ணாடி வில்லைகளை ஒரு சட்டத்தில் மாட்டிப் பயன்படுத்துவது எளிதில் விடுபடக்கூடியதாக இருந்தது. இதைத் தவிர்ப்பதற்காக லுயி டி வீக்கர் இந்த இரண்டு கண்ணாடி வில்லைகளையும் இணைத்தார். இது பின்பு 1908 ஆம் ஆண்டு டாக்டர். ஜான் எல் பார்சு (Dr. John L. Borsh) என்பவரால் காப்புரிமை பெறப்பட்டது.
இரட்டைக் குவியக் கண்ணாடி என்பது இரண்டு பார்வை சக்திகளுடன் கூடிய கண் கண்ணாடி ஆகும். இது பிரிஸ்பைபோபியா (Prisbyobia), மையோபியா (Myopia), கைபரோபோபியா (Hyperopia) மற்றும் ஆஸ்டிக்மாடிசம் (Astigmatism) போன்ற பார்வைக் குறைபாடுகளைச் சரிசெய்யப் பரிந்துரைக்கப்படுகிறது.
சிக்கல்கள்
[தொகு]இரட்டைக்குவியக் கண்ணாடிகள் ஒருசில சமயம் பயன்படுத்துவோர்களுக்கு தலைவலியையும், மயக்க உணர்வையும் தரும். இக்கண்ணாடியை பயன்படுத்தத் துவங்கியபின் நுகர்வோருக்கு பழகிக்கொள்வதற்கு சில காலம் பிடிக்கும். மூன்று குவியக்கண்ணாடி பயன்படுத்துவதாலோ அல்லது ஒற்றைக் குவியக்கண்ணாடி பயன்படுத்துவதாலோ இதற்குத் தீர்வு உண்டு.
இங்கிலாந்து நாட்டில் 1969 ஆம் ஆண்டு ஒரு விபத்தில் இரட்டைக் குவியக்கண்ணாடி அணியும் திறமை இழந்தது குறித்து ஒரு வழக்கும் உள்ளது.[4]
எதிர்காலம்
[தொகு]இரட்டைக் குவியக்கண்ணாடியின் பார்வை சக்தியை விரிவுபடுத்த ஆராய்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. கண்ணாடி வில்லைகளின் சக்தி குறிப்பிட்ட அளவு சரிசெய்து கொள்ளும் தன்மைகளைக் கொள்ளும் அளவிற்கு தொழில்நுட்பமும் புதிய பொருட்களும் உருவாக்கப்பட்டுவிடும். இரண்டு கண்ணாடி வில்லைகளுக்கு இடையில் திரவப்படிகத்தை இடைப்பொதிந்து இதுபோன்ற தன்மையை எற்கனவே ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
விலங்குகளினுலகில் இத்தொழில் நுட்பம்
[தொகு]தெர்மோநெக்ட்சு (Thermonectus marmoratus) என்னும் வண்டு, இரண்டு விழித்திரையுடன் கூடிய கண்களைக் கொண்டுள்ளது இது இரண்டு பார்வை சக்தி கொண்ட ‘இரட்டைக் குவியக்கண்ணாடியைப் போன்றது ஆகும் என்று அறிவியலாளர் கூறுகின்றனர்.[5] இதுவே விலங்குகளின் உலகத்தில் இந்தத் தொழில் நுட்பம் ஏற்கனவே பயனில் உள்ளது என்பதைக் காட்டுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ The College of Optometrists. "The 'Inventor' of Bifocals?". Archived from the original on 2011-06-13. பார்க்கப்பட்ட நாள் 2016-08-11.
- ↑ 2.0 2.1 1001 Inventions that Changed the World. General Editor Jack Challoner, Hacette Book publishing India Pvt. Ltd. 2009. p. = 221. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-5009- 685-7.
{{cite book}}
: CS1 maint: extra punctuation (link) - ↑ http://www.visionmonday.com/Default.aspx?TabId=211&Parent_content_id=11079&content_id=11095&SkinSrc=%5BL%5DSkins/VM2007/PagePrint&ContainerSrc=%5BL%5DContainers/VM2007/SimpleContainer&dnnprintmode=true
- ↑ Agarwal, R.K. (1984), Plaintiff's ability to use bifocals impaired by accident, The Ophthalmic Optician, 24 (25), page 898 (the title of this journal was changed to Optometry Today in 1985, published by the Association of Optometrists, London, England).
- ↑ Dawn Fuller (duly edited) (24 August 2010). "Bug With Bifocals Baffles Biologists". ScienceDaily. ScienceDaily LLC. Archived from the original on 25 August 2010. பார்க்கப்பட்ட நாள் 25 August 2010.
{{cite web}}
:|author=
has generic name (help)