இயசோதர மிசுரா
இயசோதரா மிசுரா Yashodhara Mishra | |
---|---|
பிறப்பு | 1951 சம்பல்பூர், ஒடிசா, இந்தியா |
தொழில் | எழுத்தாளர் மற்றும் கவிஞர் |
தேசியம் | இந்தியா |
குறிப்பிடத்தக்க விருதுகள் | சாகித்திய அகாடமி விருது - 2020 |
இயசோதர மிசுரா (Yashodhara Mishra) இந்தியாவின் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த எழுத்தாளர் ஆவார். ஆங்கிலப் பேராசிரியரான இவர் ஒடிய மொழியில் கவிதைகள், பல சிறுகதைகள் மற்றும் நாவல்களின் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். இந்திய உயர்கல்வி நிறுவனத்தில் இவர் ஒரு சக ஊழியராக இருந்தார்.
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]மிசுரா 1951 இல் ஒடிசா மாநிலத்தின் சம்பல்பூரில் பிறந்தார். ஒரு கவிஞராகவும் ஆங்கிலப் பேராசிரியராகவும் செயல்பட்டார். பல சிறுகதைகள் மற்றும் நாவல்களின் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். ஒடியா, இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளை அறிந்திருந்தார். [1]
மிசுரா கதா கதை விருது உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார். [2]
இந்திய உயர் கல்வி நிறுவனத்தில் ஒரு சக ஊழியராக இருந்தார். அங்கு இவரது ஆராய்ச்சியில் சடங்குகள், பாலினம், ஒரிசா பெண்கள் ஆகியவை இடம்பெற்றன. [3]
தனது சமுத்திரகுல கரா என்ற புத்தகத்திற்காக 2020 ஆம் ஆண்டு மிசுராவிற்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது. [4]
விருதுகள்
[தொகு]- 2020: சாகித்ய அகாடமி விருது, சமுத்திரகுல காரா.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Yashodhara Mishra பரணிடப்பட்டது 2019-07-04 at the வந்தவழி இயந்திரம், SamanvayIndianLangiagesFestival, Retrieved 11 July 2017.
- ↑ Meenakshi Sharma; Geeta Dharmarajan (1997). Katha Prize Stories. Katha. pp. 204–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-85586-52-6.
- ↑ Yashodhara Mishra, Indian Institute of Advanced Study, Retrieved 11 July 2017.
- ↑ "Sahitya Akademi announces 2020 Odia, Malayalam awards". https://www.thehindu.com/news/national/kerala/sahitya-akademi-announces-2020-odia-malayalam-awards/article36079187.ece.
வெளி இணைப்புகள்
[தொகு]- "Odisha Sahitya Akademi". odishasahityaakademi.org. Archived from the original on 13 சூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 11 சூலை 2017.