இனா வாக்னர்
இனா வாக்னர் (Ina Wagner) ஓர் ஆத்திரிய நாட்டு இயற்பியலாளர் ஆவார். கணினி விஞ்ஞானி மற்றும் சமூக விஞ்ஞானி என பன்முகங்களில் இயங்கினார். வியன்னா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் பாடத்தில் ஒரு பேராசிரியராகப் பணிபுரிந்தார். 1987 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை தீவிரமாக இயங்கினார்.[1]
வாக்னர் 1972 ஆம் ஆண்டில் வியன்னா பல்கலைக்கழகத்தில் அணு இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றார்.[1] 1979 ஆம் ஆண்டு கிளாகென்பர்ட்டு பல்கலைக்கழகத்தில் இருந்து கல்வி அறிவியலில் தனது பட்டத்தைப் பெற்றார். 1998 ஆம் ஆண்டு வியன்னாவில் "பல்துறை வடிவமைப்பு மற்றும் கணினி ஆதரவு கூட்டுறவு வேலை" பிரிவில் இரண்டாவது பட்டம் பெற்றார்.[2] 1987 ஆம் ஆண்டு இவர் வியன்னா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திற்கு வெளியேயிருந்து நியமிக்கப்பட்ட முதல் இரண்டாவது பெண் பேராசிரியர் என்ற சிறப்பைப் பெற்றார். தன்னுடைய ஓய்வு காலம் வரை தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் மதிப்பீடு நிறுவனதிற்கு தலைமையேற்று வழிநடத்தினார்.[1]
2011 ஆம் ஆண்டு வாக்னருக்கு கேப்ரியல் போசுசன்னர் மாநில பரிசு வழங்கப்பட்டது. பாலின ஆய்வுகளுக்காக ஆத்திரிய அறிவியல் அமைச்சகத்தால் இவ்விருது வழங்கப்பட்டது.[3] இதே ஆண்டில் வியன்னா நகரத்தின் பெண் என்ற விருதும் வாக்னருக்கு கிடைத்தது.[2] ஆத்திரிய வேந்தர் பணியக உயிரியல் நெறிமுறைகள் ஆணையத்தின் உறுப்பினராகவும்[4] மற்றும் அறிவியல் மற்றும் புதிய தொழில்நுட்பங்களின் நெறிமுறைகள் மீதான ஐரோப்பிய குழுவின் முன்னாள் உறுப்பினராகவும் திகழ்ந்தார்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 Lechner, Isabella (15 January 2012). ""Hätte ich emeritieren können, wäre ich geblieben"" (in de). https://www.derstandard.at/story/1326502772538/uni-professorin-im-portraet-haette-ich-emeritieren-koennen-waere-ich-geblieben. பார்த்த நாள்: 24 October 2019.
- ↑ 2.0 2.1 "Ina Wagner" (in ஜெர்மன்). Stadt Wien. பார்க்கப்பட்ட நாள் 24 October 2019.
- ↑ "Gabriele Possanner-Staatspreisträgerin 2011" (in ஜெர்மன்). Bundesministerium für Bildung, Wissenschaft und Forschung. Archived from the original on 24 அக்டோபர் 2019. பார்க்கப்பட்ட நாள் 24 October 2019.
- ↑ "Members of the Bioethics Commission" (in ஆங்கிலம்). Federal Chancellery. பார்க்கப்பட்ட நாள் 24 October 2019.