உள்ளடக்கத்துக்குச் செல்

இந்திராபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்திராபுரம்
Indirapuram
குடியிருப்பு அமைவிடம்
இந்திராபுரம் வானகத்தோற்றம்
இந்திராபுரம் வானகத்தோற்றம்
நாடுஇந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்காசியாபாத்து

இந்திராபுரம் (Indirapuram) இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் நிறுவப்பட்டுள்ள ஒரு குடியிருப்பு பகுதியாகும். வைபவ் பிரிவு , அபய் பிரிவு, அகின்சா பிரிவு, நியாய் பிரிவு, கியான் பிரிவு, நிட்டி பிரிவு மற்றும் சக்தி பிரிவு போன்ற பல்வேறு பிரிவுகளாக இப்பகுதி பிரிக்கப்பட்டுள்ளது. பிராமண சமூகத்தை சேர்ந்தவர்கள் அதிக அளவில் இங்கு உள்ளனர். தில்லி-மீரட் விரைவுச்சாலையில் இந்திராபுரம் அமைந்துள்ளது, [1] இப்பகுதி வசுந்தரா, பிரதாப் விகார், வைசாலி மற்றும் நொய்டா பிரிவு 62 & 63 ஆகிய முக்கிய பகுதிகளால் சூழப்பட்டுள்ளது.

வைசாலி மற்றும் நொய்டா மின்னணு நகர் ஆகிய இரண்டு நீல வரிசை மெட்ரோ நிலையங்களிலிருந்து 5 கிமீ தொலைவில் இந்திராபுரம் உள்ளது.[2] [3] நொய்டா பகுதியிலிருந்து காசியாபாத்தில் உள்ள மோகன் நகர் வரையிலான நீல வரிசை விரிவாக்கம், இந்திராபுரம் வழியாக மெட்ரோ வலைப்பின்னலை மேலும் வலுப்படுத்தும்.

கல்வி மற்றும் சுகாதார மையங்கள்[தொகு]

இந்திராபுரம் டிபிஎசு புனித பிரான்சிசு பள்ளி, இந்திராபுரம் கேம்பிரிட்ச்சு பள்ளி , இந்திரபுரம் பொதுப்பள்ளி, செய்ப்பூர் மேலாண்மை நிறுவனம் மற்றும் இந்திராபுரம் உயர்கல்வி நிறுவனம் ஆகியவை இங்குள்ள முக்கிய கல்வி நிறுவனங்களாகும். 5 கி.மீ தொலைவுக்குள் சாந்தி கோபால் மருத்துவமனை, நொய்டா போர்ட்டிசு மருத்துவமனை, வைசாலி மேக்சு சிறப்பு தனிக்கூறு மருத்துவமனை , எல்.ஒய்.எப் மருத்துவமனை மற்றும் அமிகேர் மருத்துவமனை போன்ற சுகாதார வசதிகள் இப்பகுதிக்கு உள்ளன. [4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Service, Tribune News. "Go from Delhi to Meerut in 45 minutes as Expressway opens for public". Tribuneindia News Service (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-04-02.
  2. "With Blue line extension, Metro comes to Indirapuram doorstep". Hindustan Times (in ஆங்கிலம்). 2019-03-10. பார்க்கப்பட்ட நாள் 2021-04-02.
  3. Abhijay Jha (Aug 5, 2020). "Indirapuram-Noida footbridge link by November | Noida News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-04-02.
  4. "Schools in Indirapuram, Ghaziabad | Fees, Reviews, Admission, Results". Edustoke (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-04-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திராபுரம்&oldid=3415444" இலிருந்து மீள்விக்கப்பட்டது