உள்ளடக்கத்துக்குச் செல்

இந்திய நாட்டுப்புற நடனங்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய நாட்டுப்புற நடனங்கள் (Indian folk dances) சந்தோசத்தையும் மகிழ்ச்சியையும் தங்களுக்குள் தெரிவித்துக் கொள்ள ஆடப்படுவதாகும். நாட்டுப்புற நடனங்கள் எல்லா சூழலிலும் ஆடப்படுகிறது. பருவ காலங்களின் வருகை, குழந்தை பிறப்பு, திருமணம், திருவிழாக்கள் மற்றும் சில பழைய சமூக பழக்க வழக்கங்கள் ஆகிய தருணங்களில் நாட்டுப்புற நடனங்கள் ஆடப் படுகிறது. இந்நடனங்கள் குறைந்த காலடிகள் அல்லது இயக்கங்களோடு மிகவும் எளிமையாக ஆடப் படுகிறது. இந்நடனம் ஆடும் நடனக் கலைஞர்கள் மிக்க ஆர்வம், உற்சாகத்தோடு மற்றும் பலத்தோடு ஆடுவார்கள். ஆண்களும் பெண்களும் தனிப்பட்ட முறையில் சில நடனங்கள் ஆடுவார்கள். இன்னும் சில நடங்களில் ஆணும் பெண்ணும் சேர்ந்து நடனம் ஆடுவார்கள். அநேக நேரங்களில் கலைஞர்கள் தாங்களே பாடிக் கொண்டு இசைகலைஞர்களின் இசைக்கருவிகளின் இசைக்கேற்ப ஆடுவார்கள். ஒவ்வொரு வகை நடனத்திற்கும் ஒரு தனிப்பட்ட விசேசித்த வகை ஆடை உண்டு. அநேக விதமான நடன ஆடைகள் அசாதாரணமாகவும் மிகத் தனித்தன்மை வாய்ந்த்தாகவும் அவற்றோடு அநேகவிதமான நகைகள் அலங்காரத்தோடும் காணப்படும். அநேக விதமான பழங்கால பழங்குடியின நடனங்கள் இருந்தாலும் அவைகள் மாறும் நவீன காலத்திற்கு ஏற்ப தொடர்ச்சியாக மேம்படுத்தப் படுகிறது. நடன கலைஞர்களின் திறமையும் கற்பனையும் உயரிய வகை நடனத்திற்கு ஒரு உந்துவிசையாக உள்ளது

அருணாசலப் பிரதேசம்

[தொகு]
அருணாச்சல பிரதேசத்தின் நாட்டுப்புற நடனங்கள்
நடனம் சமூகம்
அஜி லாமு மோன்பா பழங்குடியினர்
சலோ [1] நாக்டே பழங்குடியினர்
ஹிர்ரி ஹான்னிங் அபடானி பழங்குடியினர்
புலி மற்றும் மயில் ஆட்டம் மோன்பா
பாசி கோங்கி ஆதிப் பழங்குடியினர்
போனன்ங் ஆதிப் பழங்குடியினர்
பாபிர் ஆதித் பழங்குடியினர்
புயியா[2] மிஷ்மி பழங்குடியினர்[3]
வாஞ்சோ நாகா
பார்டோ சாம்

மேற்கோள்கள்

[தொகு]