உள்ளடக்கத்துக்குச் செல்

இணைக்குறள் ஆசிரியப்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இணைக்குறள் ஆசிரியப்பா ஆசிரியப்பாவின் நான்கு வகைகளுள் ஒன்று. ஆசிரியப்பாவில் முதலடியும் ஈற்றடியும் (இறுதி அடி) நான்கு சீர்களைக் கொண்ட அளவடிகளாகவும், இடையில் உள்ள அடிகள் அளவடி தவிர குறளடி (இரு சீர் கொண்ட அடி) மற்றும் சிந்தடி (முச்சீர் கொண்ட அடி) ஆகவும் அமைந்தால் அது இணைக்குறள் ஆசிரியப்பா எனப்படும்.

எடுத்துக்காட்டு

நீரின் தண்மையும் தீயின் வெம்மையும்
சாரச் சார்ந்து
தீரத் தீரும்
சாரல் நாடன் கேண்மை
சாரச் சாரச் சார்ந்து
தீரத் தீரத் தீர்பொல் லாதே

-யாப்பருங்கலக் காரிகை, உரைமேற்கோள்

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இணைக்குறள்_ஆசிரியப்பா&oldid=955343" இலிருந்து மீள்விக்கப்பட்டது