உள்ளடக்கத்துக்குச் செல்

இ. அண்ணாமலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இ.அண்ணாமலை (பி. 1938) இந்திய மொழிகளுக்கான மைய நிறுவனத்தில் (CIIL) இயக்குநராகப் பணிபுரிந்தவர். தற்பொழுது அமெரிக்காவில் யேல் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். தமிழ் மொழி, மொழியியல், கல்வித் துறையில் தமிழ் மொழியின் பயன்பாடு போன்ற துறைகளில் பல நூல்களை எழுதியுள்ளார். க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி, தற்கால மரபுத்தொடர் அகராதி போன்ற நூல்களின் உருவாக்கத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்புச் செய்தவர். ஐக்கிய அமெரிக்காவிலுள்ள சிகாகோ பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவரான இவர் ஐக்கிய அமெரிக்கா, அவுஸ்திரேலியா, யப்பான், நெதர்லாந்து போன்ற நாடுகளில் வருகைப் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார்.

இவரது நூல்கள்

[தொகு]
  • Adjectival Clauses in Tamil
  • Managing Multilingualism in India
  • Language Movements in India

வெளி இணைப்பு

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இ._அண்ணாமலை&oldid=3233360" இலிருந்து மீள்விக்கப்பட்டது