உள்ளடக்கத்துக்குச் செல்

ஆலம்பள்ளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆலம்பள்ளம் (Alampallam), தமிழ்நாடு, தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டாட்சியில் அமைந்திருக்கும் ஒரு கிராமம். பட்டுக்கோட்டையிலிருந்து கிழக்கே 12 கி.மீ தொலைவில் மதுக்கூர் மற்றும் ஆலத்தூர் ஆகிய ஊர்களுக்கு இடையே அமைந்துள்ளது.

கோவில்கள்[தொகு]

ஆலம்பள்ளம் கிராமத்தில் மொத்தம் 8 கோவில்கள் உள்ளன.

  • விநாயகர் கோவில்
  • முனீஸ்வரன் கோவில்
  • மழை மாரியம்மன் கோவில்
  • முத்து மாரியம்மன் கோவில்
  • காளியம்மன் கோவில்
  • பேச்சியம்மன் கோவில்
  • அய்யனார் கோவில்
  • காமாண்டி கோவில்

பள்ளிகள்[தொகு]

ஆலம்பள்ளம் கிராமத்தில் தமிழக அரசு கல்வித் துறை கட்டுப்பாட்டில் இயங்கும் அரசினர் மழலையர் கூடமும், அரசினர் நடுநிலைப் பள்ளியும் இயங்கி வருகிறது.

மழலையர் கூடம், அரசினர் ஆரம்பக் கல்வி நிலையம் ஆகும். இதில் 4 ஆசிரியர்கள் பணி புரிந்து வருகின்றனர். இது கிராம நிர்வாகத்தின் கீழ் கண்காணிக்கப் பட்டு வருகிறது.

அரசினர் நடுநிலைப் பள்ளி, 1972 ஆம் ஆண்டு ஊராட்சி ஒன்றியத் துவக்கப்பள்ளி ஆக உருவாக்கப்பட்டது. பின்னர் அரசினர் நடு நிலைப் பள்ளி ஆக தரம் உயர்த்தப்பட்டது. இதில் ஆலம்பள்ளம் மற்றும் முசிரியைச் சேர்ந்த மாணவர்கள் பயின்று வருகின்றனர். இடவசதி மற்றும் மாணவர்களின் நலன் கருதி 1999 ம் ஆண்டு இப்போதுள்ள இடத்திற்கு மாற்றப்பட்டது.

இதில் மொத்தம் 75 மாணவர்கள் பயின்று வருகின்றனர். 8 ஆசிரியர்கள் பணி புரிந்து வருகின்றனர். கணினி மற்றும் நூலகம் அரசினால் அமைத்துத் தரப்பட்டு உள்ளது. தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூகறிவியல், கைத்தொழில் மற்றும் கணிப்பொறி போன்ற பாடங்கள் தமிழக அரசின் பாடத்திட்டத்தின் கீழ் தமிழ் மொழியில் பயிற்றுவிக்கப் படுகிறது. மேலும் மாணவர்களுக்கு விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி கூடம் அமைத்துத் தரப்பட்டு உள்ளது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆலம்பள்ளம்&oldid=2753097" இலிருந்து மீள்விக்கப்பட்டது