உள்ளடக்கத்துக்குச் செல்

ஆர்கோலிட் தீபகற்பம்

ஆள்கூறுகள்: 37°32′00″N 23°07′40″E / 37.53333132°N 23.12771606°E / 37.53333132; 23.12771606
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆர்கோலிட் தீபகற்பம் (Argolid Peninsula) என்பது கிரேக்க நாட்டின், பெலொப்பொனேசியா பகுதியில் அமைந்துள்ள ஒரு தீபகற்பமாகும். இதன் பெரும்பாலான பகுதி நவீன ஆர்கோலிஸ் பகுதியில் உள்ளது. கிரேக்க முதல் பெரிய குடியிருப்புகளில் ஒன்றான மைசீனே இந்த தீபகற்பத்தில் அமைந்துள்ளது. செவ்வியல் கிரேக்க காலத்தில், இந்த தீபகற்பத்தின் முக்கிய குடியேற்றங்கள் ட்ரோசென், ஹெர்மியோன், எபிடாரஸ் போன்றவை ஆகும் . நடுக்காலத்தில், தீபகற்பத்தில் உள்ள நாஃப்பிலியோவின் குடியேற்றம் ஒரு பெரிய குடியேற்றமாக உருவானது. 1821 இல் கிரேக்கப் புரட்சியின் தொடக்கத்திலிருந்து 1834 வரை இந்த நகரம் முதல் ஹெலனிக் குடியரசு மற்றும் கிரேக்க இராச்சியத்தின் தலைநகராக செயல்பட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்கோலிட்_தீபகற்பம்&oldid=3901337" இலிருந்து மீள்விக்கப்பட்டது