உள்ளடக்கத்துக்குச் செல்

ஆர்கெஸ்ட்ராடஸ் (தளபதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆர்கெஸ்ட்ராடஸ் (Archestratus, பண்டைக் கிரேக்கம்Ἀρχέστρατος Ἀρχέστρατος ) என்பவர் கிமு 432 இல் கிளர்ச்சி செய்த பொடிடேயாவை ஒடுக்க ஏதென்சால் அனுப்பப்பட்ட ஒரு தளபதி ஆவார். கிளர்ச்சியை அடக்கி, பொடிடேயா முக்கியஸ்தர்களை பணயக்கைதிகளாக பிடித்து, நகரின் மதிலை இடிக்கும் நோக்கத்துடன் இவர் அங்கு அனுப்பப்பட்டார். இந்த போர்ப் பயணத்தின்போது இவருடன் ஆல்சிபியாடீசு மற்றும் தத்துவஞானி சாக்கிரட்டீசு ஆகியோர் சென்று போர்புரிந்திருக்கலாம் எனப்படுகிறது.

ஆர்கெஸ்ட்ராடஸ் தன் தலைமையிலான படைகளுடன் சென்று, திரேசுவில் தரையிறங்கிய பிறகு, பொடிடேயாவைத் தாக்காமல், மாசிடோனில் உள்ள தெர்மாவை நோக்கித் திரும்பினார். ஏனெனில் பொடிடேயன்களின் கிளர்ச்சிக்கு தூண்டுதலாகவும், உதவியாகவும் மாசிடோனியாவின் இரண்டாம் பெர்டிக்காஸ் இருந்ததே காரணமாகும். [1] ஆர்கெஸ்ட்ராடஸிடம் 30 கப்பல்கள் மற்றும் ஆயிரம் ஆயுதமேந்திய வீரர்கள் இருந்தனர். ஆனால் கிளர்ச்சியாளர்களை ஒடுக்க முடியாத அளவுக்கு இவரது படை மிகவும் சிறியதாக இருந்தது. [2] சில அறிஞர்கள் ஆர்க்கிஸ்ட்ராடசின் கடற்படையின் அணுகுமுறையே பொடிடேயாவை வெளிப்படையாக கிளர்ச்சியில் ஈடுபடும் நிலைக்கு தள்ளியது என்று கருத்து தெரிவித்துள்ளனர். [3]

பொடிடேயா சமரில் ஈடுபட படைகள் சுற்றி மீண்டும் வந்ததாக கருதப்படுகிறது. [4] [5]

பின்னர், ஆர்கெஸ்ட்ராடஸ் பத்து ஸ்ரடிகெஸ்களில் ஒருவராக இருந்தார் ( στοατηγοί, அல்லது "கமாண்டர்கள்") அவர்கள் 407 இல் நோட்டியம் சமருக்குப் பிறகு அல்சிபியாட்சை முறியடிக்க ஏதெனியன் கடற்படையின் கட்டளை அதிகாரிகளாக நியமிக்கப்பட்டனர்.

இந்தப் பட்டியலில் ஆர்கெஸ்ட்ராடஸின் பெயரை நமக்குக் கொடுக்கும் எழுத்தாளர்களான செனபோன் மற்றும் டியோடோரஸ் சிகுலஸ் ஆகியோர் இவரைப் பற்றி குறிப்பாக எதுவும் கூறவில்லை; ஆனால் இவர் மைட்டிலீனில் இறந்தார் என்று லிசியாசின் எழுத்துக்களிலிருந்து தெரிகிறது. எனவே காலிக்ராடிடாஸ் ஏதெனியன் கடற்படையை Ἐκατόννησοι இலிருந்து துரத்தியபோது இவர் கோனனுடன் இருந்ததாகத் தெரிகிறது. [6] [7] [8] [9] [2]

இந்த ஆர்கெஸ்ட்ராடஸ் என்ற பெயரைக் கொண்ட நபர் பூலி அவையினரிடம் மாறுபாடு கொண்டதாகக் கருதப்படுகிறது. அவர் ஏதெனியர்களை எசுபார்த்தன்களிடம் சரணடைய பரிந்துரைத்ததற்காக சிறையில் அடைக்கப்பட்டார்.

குறிப்புகள்

[தொகு]
  1. Thucydides, History of the Peloponnesian War 1.57, 1.59, 1.61
  2. 2.0 2.1 Connop Thirlwall, History of Greece, vol. iv. p. 119, note 3
  3. Lallot, Jean; Rijksbaron, Albert; Jacquinod, Bernard (2011). The Historical Present in Thucydides. Amsterdam Studies in Classical Philology. Vol. 18. Brill Publishers. pp. 122–138. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789004201187. பார்க்கப்பட்ட நாள் 2017-06-27.
  4. Lampert, Laurence (2010). How Philosophy Became Socratic: A Study of Plato's "Protagoras," "Charmides," and "Republic". University of Chicago Press. pp. 238–239. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780226470979. பார்க்கப்பட்ட நாள் 2017-06-27.லாரன்ஸ் லம்பேர்ட் (2010). How Philosophy Became Socratic: A Study of Plato's "Protagoras," "Charmides," and "Republic". University of Chicago Press. pp. 238–239. ISBN 9780226470979. Retrieved 2017-06-27.
  5. Venning, Timothy (2015). A Chronology of Ancient Greece. Pen and Sword. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781473879232. பார்க்கப்பட்ட நாள் 2017-06-27.
  6. Xenophon, Hellenica 1.5.16
  7. Diodorus Siculus, Bibliotheca historica 13.74, 77, 78
  8. Lys. Ἀπολ. δωροδ. p. 162
  9. Schn. ad Xen. Hell. 1.6.16
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்கெஸ்ட்ராடஸ்_(தளபதி)&oldid=3479531" இலிருந்து மீள்விக்கப்பட்டது