உள்ளடக்கத்துக்குச் செல்

ஆர்கி அரண்மனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆர்கி அரண்மனை
Arki palace
பகுதி: இமாச்சலப் பிரதேசம்
இமாச்சலப் பிரதேசம், இந்தியா ஆர்கி
ஆர்கி அரண்மனை
வகை கோட்டை
இடத் தகவல்
கட்டுப்படுத்துவது தனியார்
நிலைமை அழிவுகள்
இட வரலாறு
கட்டிய காலம் 1695 - 1700 CE
கட்டியவர் இராணா பிரித்திவி சிங்
கட்டிடப்
பொருள்
கருங்கல் (பாறை) பாறைகள் மற்றும் சுண்ணாம்புக் கற்கள்
ஆர்கி அரண்மனையின் பக்கவாட்டுத் தோற்றம்

ஆர்கி அரண்மனை (Arki palace) இந்தியாவின் இமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள சோலன் மாவட்ட ஆர்கி நகரத்தில் அமைந்துள்ளது.

ஆர்கி அரண்மனை 1695 - 1700 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் இராணா சபா சந்தின் வம்சாவளியான இராணா பிருத்வி சிங் என்பவரால் கட்டப்பட்டது. 1806 ஆம் ஆண்டில் இது இராணாசபா சந்தின் வழித்தோன்றலான கூர்க்காக்களால் கைப்பற்றப்பட்டது. பாகலின் ஆட்சியாளரான இராணா சகத் சிங் நளகாரில் தஞ்சம் புகுந்தார். 1806 முதல் 1815 ஆம் ஆண்டு வரையிலான இந்த காலகட்டத்தில், கூர்க்கா பெரும்படைத் தலைவர் அமர் சிங் தாபா ஆர்க்கியை தனது கோட்டையாகப் பயன்படுத்தி இமாச்சல பிரதேசத்தில் நாகர்கோட் என்றழைக்கப்பட்ட காங்க்ரா வரை மேலும் முன்னேறினார். பர்மார் வம்ச இராசபுத்திரரான இராணா அசய் தேவ் என்பவரால் நிறுவப்பட்ட பாகல் மாநில மலை மாநிலத்திற்கு ஆர்கி தலைநகராக இருந்தது. 1643 ஆம் ஆண்டில் இந்த மாநிலம் நிறுவப்பட்டது. ஆர்கியை அதன் தலைநகராக இராணாசபா சந்த் 1650 ஆம் ஆண்டில் அறிவித்தார். [1]

தங்குமிடம் மற்றும் ஓய்விடம்

[தொகு]

ஒரு பொதுப்பணித்துறை ஓய்வு இல்லம், ஒரு வனத்துறை ஓய்வு இல்லம் தவிர ஆர்கி நகரில் சில தனியார் உணவு விடுதிகள் உள்ளன.

காட்சிக்கூடம்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "The Tribune - Windows - Getaway". www.tribuneindia.com.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்கி_அரண்மனை&oldid=3060120" இலிருந்து மீள்விக்கப்பட்டது