ஆத்திரேலியத் தேசியக் கட்சி
ஆஸ்திரேலியத் தேசியக் கட்சி National Party of Australia | |
---|---|
தலைவர் | வாரன் டிரசு நாஉ |
தலைவர் | கிறிஸ்டீன் பெர்கசன் |
பிரதித் தலைவர் | நைஜல் ஸ்கலியன் |
தொடக்கம் | 20 சனவரி 1920 |
தலைமையகம் | ஜான் மெக்கெவன் மாளிகை 7 நேசனல் சேர்க்கிட் பார்ட்டன் கான்பரா 2600 |
இளைஞர் அமைப்பு | இளம் தேசியவாதிகள் |
கொள்கை | பழைமைவாதம், நில நியாயக் கோட்பாடு[1] |
அரசியல் நிலைப்பாடு | நடு-இடதுசாரி |
நிறங்கள் | பச்சை, மஞ்சள் (நிறம்) |
பிரதிநிதிகள் சபை | 6 / 150 |
மேலவை | 5 / 76 |
இணையதளம் | |
http://www.nationals.org.au/ |
ஆத்திரேலியத் தேசியக் கட்சி (National Party of Australia) ஆத்திரேலியாவின் ஓர் அரசியல் கட்சியாகும். பொதுவாக இக்கட்சி கால்நடை மேய்ப்பவர்கள், விவசாயிகள், கிராம வாக்காளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். இக்கட்சி 1920 ஆம் ஆண்டில் ஆத்திரேலிய நாட்டுக் கட்சி என ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் 1975 ஆம் ஆண்டில் தேசிய நாட்டுக் கட்சி (National Country Party) எனப் பெயர் மாற்றப்பட்டது. பின்னர் 1982 ஆம் ஆண்டில் ஆத்திரேலியத் தேசியக் கட்சி என மாற்றப்பட்டது. பொதுவாக இவர்கள் "தேசியவாதிகள்" என அழைக்கப்படுகின்றனர். நடுவண் அரசு, மற்றும் நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா, மேற்கு ஆஸ்திரேலியா மாநில அரசுகளிலும் இக்கட்சி லிபரல் கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது. குயின்ஸ்லாந்து மாநிலத்தில் 1936 முதல் 2008 வரை முக்கிய எதிர்க்கட்சியாக இருந்துள்ளது. பின்னர் இக்கட்சி ஆத்திரேலிய லிபரல் கட்சியின் குயின்சுலாந்துக் கிளையுடன் குயின்சுலாந்து லிபரல் தேசியக் கட்சி என்ற கூட்டுப் பெயரில் இணைந்தது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "National Party Constitution" (PDF). Archived from the original (PDF) on 25 ஏப்ரல் 2013. பார்க்கப்பட்ட நாள் 19 March 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)