அலபாமா அரசுப் பல்கலைக்கழகம்
Alabama State University | |
குறிக்கோளுரை | வாய்ப்பு இங்கே உள்ளது. |
---|---|
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை | "Opportunity is Here." |
வகை | பொது |
உருவாக்கம் | 1867 |
நிதிக் கொடை | 78 மில்லியன் |
மாணவர்கள் | 12,000 |
பட்ட மாணவர்கள் | 7,800 |
பட்டப்பின் படிப்பு மாணவர்கள் | 3,400 |
400 | |
பிற மாணவர் | 400 |
அமைவிடம் | , ஐக்கிய அமெரிக்கா, அலபாமா |
வளாகம் | நகர்ப்புற வளாகம், 172 ஏக்கர்கள் [1] |
நிறங்கள் | கருப்பு, தங்க நிறம் |
விளையாட்டுகள் | கால்பந்து பேஸ்பால் கூடைப்பந்து கோல்ஃப் டென்னிஸ் தடகளம் பூப்பந்து கைப்பந்து |
சுருக்கப் பெயர் | ஹார்னெட்ஸ், லேடி ஹார்னெட்ஸ் |
இணையதளம் | www.alasu.edu |
அலபாமா அரசுப் பல்கலைக்கழகம் அமெரிக்காவில் உள்ள அலபாமா நகரமான மொண்ட்கோமெரி நகரில் உள்ளது.
கல்வி[தொகு]
இங்கு ஐந்தாயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.
- வணிக நிர்வாகக் கல்லூரி
- கல்விக் கல்லூரி
- உடல் நலக் கல்விக் கல்லூரி
- கலைக் கல்லூரி
- அறிவியல், தொழில் நுட்பம், கணிதக் கல்லூரி
- கவின்கலைக் கல்லூரி
- வானியல் கல்லூரி
- தொடர்கல்விக் கல்லூரி
வளாகம்[தொகு]
இது 172 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு 267,000 நூல்களைக் கொண்ட நூலகம் உள்ளது. மாணவர்களுக்கான வகுப்பறைகளும், அலுவலங்களும், மருத்துவக் கூடமும் அமைந்துள்ளன. பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான வானொலி வசதியும் உள்ளது.
மாணவர்கள்[தொகு]
மாணவர்கள் தங்களுக்கு பிடித்த கருத்துக்கேற்ப குழுக்களை அமைத்துக் கொள்கின்றனர். சமுதாயம், சமயம், இசை என பல்வேறு துறைகளைச் சேர்ந்த குழுக்கள் உண்டு. மாணவர்களே இணைந்து நாளேடுகளையும் வெளியிடுகின்றனர். தி ஹார்னெட் டிரிபியூன், தி ஹார்னெட் ஆகியன குறிப்பிடத்தக்கன.
விளையாட்டு[தொகு]
இங்கு ஆண்களுக்கான கால்பந்து, பேஸ்பால், கோல்ஃப், டென்னிஸ் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளை நடத்துகின்றனர். பெண்களுக்காக கைப்பந்து, கால்பந்து, பூப்பந்து, டென்னிஸ், கூடைப்பந்து, கோல்ப் உள்ளிட்ட விளையாட்டுகளில் பயிற்சியளிக்கின்றனர். இந்த மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான போட்டிகளில் பங்கேற்றுள்ளனர்.
சான்றுகள்[தொகு]
- ↑ "Alabama State University". The Encyclopedia of Alabama. July 28, 2008. Archived from the original on நவம்பர் 5, 2011. பார்க்கப்பட்ட நாள் ஜூலை 9, 2014.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help)
இணைப்புகள்[தொகு]