அர்பா சயீதா செரா
அர்பா சயீதா செரா (Arfa Sayeda Zehra) ஒரு பாக்கித்தான் கல்வி நிபுணர் மற்றும் உருது மொழி நிபுணர் ஆவார். இவர் முதலில் லாகூர் மகளிர் பல்கலைக்கழகம், பின்னர் அரசு கல்லூரி பல்கலைக்கழகம் , மனோவாவில் உள்ள ஹவாய் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றார். செரா வரலாற்றுப் பேராசிரியர் மற்றும் லாகூர் மகளிர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் முதல்வர் ஆவார். இவர் பெண்களின் நிலை குறித்த தேசிய ஆணையத்தின் தலைவராக இருந்தார். செரா பஞ்சாபின் முன்னாள் மாகாண அமைச்சர் ஆவார். உருது மொழி மற்றும் இலக்கியம் பற்றிய இவரது பங்களிப்பிற்காக அங்கீகரிக்கப்படுகிறார். அறிவுசார் வரலாறு மற்றும் தெற்காசிய சமூகப் பிரச்சினைகளில் நிபுணத்துவம் பெற்றவர் ஆவார்.
கல்வி
[தொகு]அர்பா சயீதா செரா லாகூர் மகளிர் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பைப் பயின்றார். இவர் லாகூரில் உள்ள அரசு கல்லூரி பல்கலைக்கழகத்தில் உருதுவில் முதுகலைப் பட்டம் பெற்றார். மனோவாவில் உள்ள இவாய் பல்கலைக்கழகத்தில் ஆசியப் படிப்பில் முதுகலைப் பட்டத்தையும், தத்துவவியலாளர் பிரிவில் முனைவர் பட்டம் பெற்றார். [1]
அறிவார்ந்த தொழில்
[தொகு]1966 ஆம் ஆண்டு முதல் 1972 வரை, லாகூர் மகளிர் கல்லூரியில் விரிவுரையாளராக இருந்தார். இவர் 1972 இல் உதவி பேராசிரியராக ஆனார் மற்றும் 1984 வரை கற்பித்தல் பணியினை மேற்கொண்டார். 1985-1988 வரை லாகூர் மகளிர் பல்கலைக்கழகத்தின் துணை முதல்வராக பணியாற்றினார். [1] [2] 1989 முதல் 2002 வரை குல்பெர்க் அரசு மகளிர் கல்லூரியின் முதல்வராக இருந்தார். 2002 முதல் 2005 வரை இவர் பஞ்சாப் பொது சேவை ஆணையத்தில் உறுப்பினராக இருந்தார். பெண்களின் நிலை குறித்த தேசிய ஆணையத்தின் தலைவராக இவர் இருந்தார். [1] [2] இவர் பஞ்சாபின் முன்னாள் மாகாண அமைச்சராக இருந்தார். [2] [3] ஆகஸ்ட் 2009 இல் வரலாற்றுப் பேராசிரியராக ஃபார்மன் கிறிஸ்டியன் கல்லூரியில் ஆசிரியராக சேர்ந்தார். லாகூர் மேலாண்மை அறிவியல் பல்கலைக்கழகம், தேசிய கலைக் கல்லூரி, தேசிய பொதுக் கொள்கை பள்ளி மற்றும் தேசிய மேலாண்மை நிறுவனம் ஆகிய நிறுவனங்களில் வருகைதரும் பேராசிரியராக இருந்தார். இவரது ஆராய்ச்சி அறிவுசார் வரலாறு, வரலாற்று பகுப்பாய்வு மற்றும் விமர்சனம், மனித உரிமைகள் மற்றும் பாலின இலக்கியம் மற்றும் சமூக பிரச்சினைகள் ஆகிய துறைகளை மையமாகக் கொண்டது. [4] [5] இவர் லாகூரில் உள்ள பார்மன் கிறிஸ்டியன் கல்லூரியில் பேராசிரியராக உள்ளார். [6] [7]
உருது மொழி
[தொகு]உருது மொழி மற்றும் இலக்கியம் பற்றிய அறிவிற்காக இவர் அங்கீகரிக்கப்பட்டார். இவர் தொடர்ந்து மொழியியல் அறிவினை புத்தகங்களுக்கான அணுகலுக்காகவும், பாக்கித்தானிய இளைஞர்களின் தேசிய மொழிக்கான "இலக்கியப் புரட்சிக்காகவும்" பயன்படுத்துகிறார். [8] மொழியின் உணர்வுகள் மீதான வகுப்புவாதம் மற்றும் காலனித்துவத்தின் தாக்கங்களைப் பற்றி இவர் விவாதித்துள்ளார். [9] இவரது இலக்கிய தாக்கங்களில் காலிப் மற்றும் சையது அகமது கான் ஆகியோர் அடங்குவர். [7] இவர் ஒரு வரலாற்றாசிரியர் என்று பாராட்டப்படுகிறார். [10]
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]செரா, மனித வளர்ச்சி, அடிப்படை மனித உரிமைகள் மற்றும் பாலின சமத்துவத்திற்காக வாதாடுகிறார். இருப்பினும் இவர் எந்த அரசு சாரா நிறுவனத்திலும் அதிகாரப்பூர்வ உறுப்பினராக இருந்ததில்லை. இவர் பெண்களின் நிலை குறித்த தேசிய ஆணையத்தின் தலைவராக உள்ளார் மற்றும் பெண்களின் அடிப்படை சட்ட உரிமைகள் குறித்த ஒரு மன்றத்தை நிர்வகித்தார். [11] பெண் சமத்துவம் மற்றும் சமத்துவத்திற்கான இவரது பணி ஒரு மகளிர் கல்லூரியில் கற்பிக்க இவளை தேர்வு செய்ய ஒரு காரணியாக இருந்தது. [7]
சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "Profile of Directors". Punjab Rural Support Programme. பார்க்கப்பட்ட நாள் 2018-10-01.
- ↑ 2.0 2.1 2.2 Memon, Qalandar Bux (28 November 2014). "Herald exclusive: In conversation with Arfa Sayeda Zehra".
- ↑ Hanif, Intikhab (19 November 2007). "20-member cabinet to take oath today".
- ↑ "Arfa Zayeda Zehra Biosketch" (PDF). Centre of Biomedical Ethics and Culture. Archived from the original (PDF) on 2016-03-19. பார்க்கப்பட்ட நாள் 2018-10-01.
- ↑ "Dr Arfa Sayeda Zehra". http://www.fccollege.edu.pk/member/dr-arfa-sayeda-zehra.
- ↑ "2010-2018 Distinguished Alumni Awardees". East West Center (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-10-01.
- ↑ 7.0 7.1 7.2 Memon, Qalandar Bux (2014-11-28). "Herald exclusive: In conversation with Arfa Sayeda Zehra". https://www.dawn.com/news/1147291.
- ↑ Durrani, Raania Azam Khan. "The dream of a literary revolution". The Friday Times. Archived from the original on 25 April 2011. பார்க்கப்பட்ட நாள் 2018-10-10.
- ↑ Ahmed, Ebad (2017-02-11). "What happened to Urdu?" (in en-US). Geo.tv. https://www.geo.tv/latest/130731-What-happened-to-Urdu.
- ↑ Ahmed, Hassaan (2017-02-25). "True history of Pakistan cannot be read in course books, says Zehra Nigah". www.pakistantoday.com.pk (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-10-12.
- ↑ "Their lives don’t matter". https://www.thenews.com.pk/archive/print/23829.[தொடர்பிழந்த இணைப்பு]