உள்ளடக்கத்துக்குச் செல்

அரேகிருட்டிணா மகதாப் மாநில நூலகம்

ஆள்கூறுகள்: 20°16′32″N 85°50′02″E / 20.275666°N 85.833818°E / 20.275666; 85.833818
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரேகிருட்டிணா மகதாப் மாநில நூலகம்
ହରେକୃଷ୍ଣ ମହତାବ ରାଜ୍ୟ ଗ୍ରନ୍ଥାଗାର
நாடுஇந்தியா
வகைபொது நூலகம்
தொடக்கம்1959 (1959)
அமைவிடம்புவனேசுவரம், ஒடிசா
அமைவிடம்20°16′32″N 85°50′02″E / 20.275666°N 85.833818°E / 20.275666; 85.833818
Collection
Items collectedபுத்தகங்கள்,பத்திரிக்கைகள்,செய்தித்தாள்கள், கல்விச் செய்தியிதழ்கள், தரவுத்தளங்கள்,வரைபடங்கல், அஞ்சல் வில்லைகள், அச்சு இதழ்கள்,ஓவியங்கள்,கையெழுத்துப்படிகள் மற்றும் ஊடகம்.
அளவு218 ஆயிரம் புத்தகங்கள் (2007)
Access and use
Population served10 ஆயிரம்(2017)
ஏனைய தகவல்கள்
நிதிநிலை62,590(2007-08)[1]
பணியாளர்கள்24
இணையதளம்hkmsl.gov.in
Map
Map

அரேகிருட்டிணா மகதாப் மாநில நூலகம் (Harekrushna Mahtab State Library) இந்தியாவின் ஒடிசா மாநிலம் புவனேசுவர் நகரிலுள்ள ஒரு நூலகமாகும். [2] முதலாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் போது 1959 ஆம் ஆண்டு நூலகத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தன. மூன்று ஏக்கர் பரப்பளவில் நூலகம் அமைந்துள்ளது. 350 வாசகர்கள் அமர்ந்து படிக்கும் வசதி நூலகத்தில் உள்ளது.

ஒடிசா மாநில தலைமைச் செயலகத்திற்கு அடுத்துள்ள சச்சிவலே சாலையில் நூலகம் அமைந்துள்ளது. [3] தற்போது இச்சாலை உலோக் சேவா சாலை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இங்கு ஒடிசா மாநில நூலகம் மற்றும் புவனேசுவர் நகரத்திற்கான பொது நூலகம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. மகாத்மா காந்தியின் நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக நூலகத்திற்கு 1967 ஆம் ஆண்டு ”காந்தி பவன்" என்று பெயரிடப்பட்டது. ஒடிசாவின் முதலாவது முதலமைச்சர் பெயரான அரேகிருட்டிணா மகதாப் என்ற பெயர் 1987 ஆம் ஆண்டு நூலகத்திற்கு மறுபெயராக மாற்றப்பட்டது. [4] [5][6]

இந்தியாவின் சிறந்த மாநில நூலகம் என்று இந்நூலகத்திற்கு விருது வழங்கப்பட்டுள்ளது. [7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Budget". hkmsl.gov.in.
  2. C. P. Vashishth (1994). Library Movement and Library Development in India: Seminar Papers. Indian Library Association.
  3. B. D. Panda (1992). Development of Public Libraries in Orissa: Analytical Aspects. Pratibha Prakashan. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-85268-17-0.
  4. Dr. Kapil Singh Hada; Dr. R. p. Bajpai (29 May 2014). Integrated Indian Public Library System. Partridge Publishing India. pp. 36–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4828-2163-5.
  5. "Welcome to Harekrushna Mahtab State Library". hkmsl.gov.in.
  6. "Readers Service". hkmsl.gov.in.
  7. India. Dept. of Culture (2005). Annual Report. Government of India, Department of Culture.