அருந்ததி (2009 திரைப்படம்)
அருந்ததி(Telugu: అరుంధతి) 2009 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியிடப்பட்டது. இத்திரைப்படத்தை கொடி இராமக்கிருஷ்ணா இயக்கியுள்ளார். அனுசுக்கா செட்டி, சோனு சூத், சாயாஜி சிண்டே ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஜனவரி 16, 2009 அன்று வெளியிடப்பட்டு நல்ல விமர்சனங்களைப் பெற்றதுடன், அதிக வசூலையும் பெற்றது. அதிக வசூல் செய்த இரண்டாவது தெலுங்குத் திரைப்படம் என்னும் சாதனையையும் இத்திரைப்படம் உருவாக்கியது.[1] தெலுங்கில் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாளத்தில் இதே பெயரில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது. மந்ரசக்தி என்று ஒரிய மொழியிலும், சுமித் ஆர்ட்ஸ் நிறுவனத்தால்அருந்ததி-ஏக் அனோகி கஹாணி என்ற பெயரில் இந்தி மொழியிலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது. வங்காள மொழியில் இத்திரைப்படம் இதே பெயரில் மறு உருவாக்கம் செய்யப்பட்டது. அதில் கோயல் மாலிக் நடித்தார்.
கதைச்சுருக்கம்
[தொகு]மகா சமஸ்தானமான கட்வால் சமஸ்தான அரசரின் எள்ளுப்பேத்தி அருந்ததி ஆவார். அருந்ததிக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வந்தன. இவள் அவளின் கொள்ளுப்பாட்டிக்கு பிறகு அக்குடும்பத்தில் பிறந்த முதல் பெண் ஆவார். கட்வாலில் தங்கியிருக்கும் தனது தாத்தாவை பார்க்க அருந்ததி அங்கு செல்கிறார். தாத்தா குடும்பத்தின் தலைவராக இருந்தபோதும், அருந்ததியை மிகவும் மரியாதையுடன் நடத்தினார். அருந்ததி அவரைவிட வயதில் பெரியவரைப் போல நடத்தினார். அப்பொழுது அருந்ததி திருமணம் செய்து கொள்ளப் போகும் மணமகனான ராகுலின் குரலில் தவறான ஒரு தொலைபேசிஅழைப்பு வருகிறது. அக்குரல் அருந்ததியினை கட்வால் கோட்டைக்கு வரச்சொல்லி அழைக்கிறது. அங்கு அவர் ஒரு வித்யாசமான சூழ்நிலையை எதிர்கொள்கிறார். பின்னர் அங்கிருக்கும் வயதான வேலை ஆளான சந்திரம்மாவிடம் தனது கொள்ளுப்பாட்டியான அருந்ததி பற்றி தெரிந்து கொள்கிறார். சந்திரம்மா இவர் கொள்ளுப் பாட்டியான ராணி அருந்ததி/ ஜெக்கம்மா போலவே இருப்பதாகவும் கூறுகிறார்.ராணி அருந்ததி ஓவியக்கலை, நடனம், தற்காப்புக் கலைகள் ஆகிய அனைத்திலும் சிறந்தவளாக விளங்கியதாகவும் சந்திரம்மா கூறினார். தன் சொந்த அக்காவின் கணவனான பசுபதி பெண் பித்தனாக இருந்ததற்காகவும், அருந்ததியின் நடன ஆசிரியரை அவன் கற்பழித்து கொண்டதற்காகவும் அருந்ததி பசுபதியை தண்டித்து, மக்களின் மத்தியில் விடுகிறார். மக்களும் அவன் செய்த அநீதிகளுக்காக அவனை அடிக்கின்றனர். குற்றுயிரும் குலையுயிருமாக இருந்த பசுபதி அகோரிகளிடம் சென்று உயிர் பிழைத்து யாராலும் தண்டிக்க முடியாத அசுரனாக மாறி கட்வால் சமஸ்தானத்து மக்களை தண்டிக்கிறான். பின்னர் அருந்ததியும் பசுபதியும் சண்டையிட்டுக் கொள்கின்றனர். அந்த சண்டையில் பசுபதியை கொன்று அருந்ததியும் இறக்கிறார். பசுபதியின் ஆத்மா கோட்டைக்குள் புகுந்து கொள்கிறது. அதுவே இந்த அருந்ததியை ராகுலின் குரலில் தொலைபேசியில் அழைத்து கொலை செய்யத் துடிக்கிறது. கதையை கேட்ட அருந்ததி தனது கொள்ளுப்பாட்டி அருந்ததி எவ்வாறு பசுபதியைப் கொள்ளவேண்டும் என்று எழுதியிருந்த குறிப்பைப் பார்த்து பசுபதியின் ஆத்மாவை கொள்கிறார்.
நடிகர்கள்
[தொகு]அனுஷ்கா செட்டி அருந்ததி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
சோனு சூட் பசுபதி எனும் கதாபாத்திரத்தில் நடித்தார்.
அரிஜன் பஜ்வா ராகுல் எனும் கதாபாத்திரத்தில் நடித்தார்.
சயாஜி ஷிண்டே அன்வர் கதாபாத்திரத்தில் நடித்தார்.
மனோரம்மா சந்திராம்மா என்னும் கதாபாத்திரத்தில் நடித்தார்.
கைகலா சத்யநாராயணா பூபதி ராஜா எனும் கதாபாத்திரத்தில் நடித்தார்.
சுபாஷினி பசுபதியின் அம்மா கதாப்பாத்திரத்தில் நடித்தார்.
பானுச்சந்தர் அருந்ததியின் அப்பா கதாப்பாத்திரத்தில் நடித்தார்.
அனிதா ராய்சுர்கர்
அகுதி பிரசாத்
சலப்பதி ராவ்
சிவ பார்வதி
திவ்யா நாகேஷ் - இளம் வயது அருந்ததியாக நடித்துள்ளார்.
லீனா சித்து நடன ஆசிரியர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்
மீனா குமாரி
விருதுகள்
[தொகு]நந்தி விருதுகள்
[தொகு]சிறந்த வில்லன்- சோனு சூட்
சிறந்த குழந்தை நடிகை - திவ்யா நாகேஷ்
சிறந்த தொகுப்பாளர் - மார்த்தான்ட் கே வெங்கடேஷ்
சிறந்த கலை இயக்குநர் - அசோக்
சிறந்த இசைக்கலவை – ராதா கிருஷ்ணா மற்றும் மது சூதணன் ரெட்டி
சிறந்த ஆடை வடிவமைப்பாளர் தீபா சந்தர்
சிறந்த ஒப்பனை கலைஞர் - ரமேஷ் மகந்தி
சிறந்த பின்னணி குரல்- ஆண்- பி.ரவிசங்கர்
சிறப்பு நுட்ப தோற்ற வடிப்புக்கான நந்தி விருது - ராகுல் நம்பியார்
நடுவர்களின் சிறப்பு விருது - அனுஷ்கா ஷெட்டி
சிறந்த நடிகை விருது - அனுஷ்கா ஷெட்டி
சிறந்த துணை நடிகர் விருது - சோனு சூத்
சந்தோசம் திரைப்பட விருதுகள்
[தொகு]சிறந்த இயக்குநர் - கொடி ராமகிருஷ்ணா
சிறந்த தயாரிப்பாளர் - சியாம் பிரசாத் ரெட்டி
சிறந்த நடிகை - அனுஷ்கா ஷெட்டி
சிறந்த வில்லன் - சோனு சூத்
சிறந்த பின்னணி குரல் - ஆண் - பி.ரவிசங்கர்
சிறந்த புகைப்படவியலாளர் - கே கே செந்தில் குமார்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Telugu Box Office: Arundhati is a blockbuster". Sify. பார்க்கப்பட்ட நாள் 28 January 2009.