அருணாசல புராணம்
Appearance
அருணாசல புராணம் (அருணன்+அசலம்+புராணம்) என்னும் நூல் எல்லப்ப நாவலர் என்பவரால் பாடப்பட்டது.
- இந்த நூலின் காலம் பொ.ஊ. 16-ஆம் நூற்றாண்டு.
- சோழநாட்டுச் சைவ வேளாளர் இல்லங்களில் பெரிதும் போற்றப்படும் நூல்கள்
- அருணாசல புராணம்
- பெரிய புராணம்
- திருவிளையாடல் புராணம்
- பிரமோத்தர காண்டம்
‘அண்ணல் மலை’யாகிய திருவண்ணாமலையை அருணன் அசலம் எனக் கொண்டு பிற்காலத்தில் வடமொழியாளர் பெயர் சூட்டினர்.
அண்ணாமலை அண்ணலாகிய சிவபெருமானின் புகழைப் போற்றுவது இந்த நூல்.
இஃது இரண்டு பாகங்களாக அமைந்துள்ளது.
- முதல் பாகத்தை வடமொழிச் சிவபுராணத்திலுள்ள ‘ருத்திர சங்கிதை’யிலிருந்தும்,
- இரண்டாம் பாகத்தை ‘லிங்க புராண’த்திலிருந்தும் கருத்துகளை எடுத்துக்கொண்டு பாடியதாகப் புலவரே தம்பாடலில் குறிப்பிடுகிறார்.
பாயிரம் நீங்கலாக ஒவ்வொன்றிலும் ஆறு சருக்கங்கள் உள்ளன.
451 பாடல்கள்
|
137 பாடல்கள்
|
- இதே நூற்றாண்டில் இதே அண்ணாமலையைப் பற்றி அருணகிரிப் புராணம் என்னும் நூல் மறைஞான சம்பந்தர் என்பவரால் இயற்றப்பட்டுள்ளது.
வேறு பதிப்பு மூலமும் கதைகளும்
[தொகு]இந்த நூல் பாயிரம், மற்றும் 14 சருக்கங்கள் கொண்ட நிலையில் வேறொரு பதிப்பு உள்ளது.[1]
கருவிநூல்
[தொகு]- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் 1, 2005