அரசு மேல்நிலைப் பள்ளி கடுக்காய் வலசை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கடுக்காய் வலசை அரசு மேல்நிலைப் பள்ளி (Govt.Hr.Sec school, Kadukkaivalasai) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் இராமநாதபுரம் மாவட்டத்தில் சேர்வைகாரன் ஊரணிக்கு அருகில் கடுக்காய்வலசை கிராமத்தில் அமைந்துள்ளது.[1] [2]கடுக்காய்வலசை கிராமம் மண்டபம் ஒன்றியம் மானாங்குடி ஊராட்சிக்கு உட்பட்டதாகும். இராமநாதபுர மாவட்டத்தில் தோன்றிய பழமையான பள்ளிகளில் கடுக்காய் வலசை அரசு மேல்நிலைப் பள்ளியும் ஒன்றாகும்.

ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகள் பள்ளியில் கல்வி கற்க வருகின்றனர். வணிகவியல், கணிதவியல், கணிணி அறிவியல், அறிவியல் ஆகிய பாடங்களில் மேல்நிலைக் கல்வி மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகின்றன. இரெகுநாதபுரம், பிரப்பன் வலசை, சேர்வைகாரன் ஊரணி போன்ற சுற்றுப்புற கிராமங்களிலிருந்து வரும் மாணவர்கள் தங்கி படிக்கும் வகையில் மாணவ, மாணவியர் தங்குவதற்கு தனித்தனி விடுதி வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "100 சதவீதம் தேர்ச்சியில் அரசு பள்ளிகள் பின்னடைவு". தினமலர். https://m.dinamalar.com/detail.php?id=2022596. பார்த்த நாள்: 24 December 2023. 
  2. "GOVERNMENT HIGHER SECONDARY SCHOOL, KADUKKAIVALASAI - - Stack Schools", stackschools.com, பார்க்கப்பட்ட நாள் 2023-12-24