உள்ளடக்கத்துக்குச் செல்

அப்துல்லாஹ் ஆதம் ஜவேரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அப்துல்லா ஆதம் ஜவேரி இன்றைக்கு சுதந்திரம் என்ற பெயர் கேட்டாலே அனைவருக்கும் நினைவில் வரும் காந்தியைத்தான் அந்த மகாத்மா காந்தியை தேசப்பிதாவாக மாற்றியவர்களில் ஒருவர் தான் இந்த அப்துல்லாஹ் ஆதம் ஜவேரி

பிறப்பு

[தொகு]

அப்துல்லாஹ் ஆதம் ஜவேரி இன்றைய குஜராத் மாநிலம் போர்பந்தரில் பிறந்தவர், இவருடைய சகோதரர் அப்துல் கரீம் ஆதம் ஜவேரியுடன் இணைந்து தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் 1865 ஆம் ஆண்டு தாதா அப்துல்லாஹ் கம்பெனி என்ற பெயரில் 50 சரக்கு கப்பல்களையும் 4 பயணிகள் கப்பல்களையும் கொண்ட மிகப் பெரிய நிறுவனத்தை நடத்தியவர். பல நாடுகளுக்குச் சென்று பெயர் சொல்லும் அளவுக்கு கடல் வாணிபத்தில் சிறந்து விளங்கியவர்.

காந்தியின் தென்னாப்பிரிக்க வருகை

[தொகு]

ஜவேரி சகோதர்களின் நிறுவனமான தாதா அப்துல்லா கம்பெனியின் அலுவலக வேலைகளை முறையாகச் செய்ய சட்டம் தெரிந்த ஒரு நபரை பணிக்கு அமர்த்த வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தனர். அச்சமயத்தில் அப்துல் கரீம் ஆதம் ஜவேரி அவர்கள் 1893 ஆம் ஆண்டு போர்பந்தரில் உள்ள தனது தாயைக்காண வந்த போது வீட்டிற்கு அருகாமையில் இருந்த சட்டம் படித்து முடித்த இளைஞர் காந்தியைசந்தித்தபின் அலுவலகப் பணிக்காக தனது சகோதரர்களுடன் கலந்து ஆலோசித்து 105 பவுண் சம்பளத்திற்கு வேலைக்கு அமர்த்தினார்கள்.

அதே 1893 ஆம் ஆண்டில் அப்துல் கரீம் ஜவேரியுடன் காந்தி கப்பலில் புறப்பட்டு டர்பன் துறைமுகத்துக்குப் போய்ச் சேர்ந்தார். காந்தியின் அரசியல் வாழ்க்கைக்கும் இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கும் சுழி போடுகிறோம் என்பது ஜவேரிசகோதரர்களுக்கு அப்போது தெரியாது.

தாதா அப்துல்லா கம்பெனியின் வழக்கு தொடர்பாக டர்பன் நகரிலிருந்து பிரிட்டோரியா நகருக்கு காந்தி ரயிலில் சென்ற போதுதான், மாரிட்ஸ்பார்க் ரயில் நிலையத்தில் முதல் வகுப்புப் பெட்டியிலிருந்து வெள்ளையர் ஒருவரால் கீழே தள்ளப்பட்டார் பின்னாளில், இந்தியாவின் விடுதலைக்கே காரணமாக அமைந்தது இச்சம்பவம்.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்துல்லாஹ்_ஆதம்_ஜவேரி&oldid=2831602" இலிருந்து மீள்விக்கப்பட்டது