அன்னூர் மகாவிஷ்ணு கோயில்
அன்னூர் மகாவிஷ்ணு கோயில் இந்தியாவில் கேரள மாநிலத்தில் பையனூர் நகருக்கு வடக்கில் 3.5 கி.மீ. தொலைவில் உள்ள அன்னூர் கிராமத்தில் உள்ள விஷ்ணு கோயிலாகும்.[1]
வரலாறு
[தொகு]இந்த தலத்தின் பெயரான அன்னூர் என்பதானது அன்னூரின் முதன்மைக்கடவுளான அன் எனப்படுகின்ற மகாவிஷ்ணுவைக் குறிக்கும் சொல்லிலிருந்து வந்ததாக அறிஞர்கள் கருதுகின்றனர். வாய்மொழிக்கதைகளிலும், அப்பகுதியில் காணப்படுகின்ற தெய்யங்களின் தோட்டம் பாட்டிலும் இக்கோயிலைப் பற்றிய வரலாறு காணப்படுகிறது.
பூசைகள்
[தொகு]இக்கோயிலில் நடை திறப்பு (காலை 5.30 மணி), உஷாக்கால பூசை (காலை 7.00 மணி), உச்சிகால பூசை (காலை 9.30 மணி), நடை அடைப்பதற்கான பூசை (காலை 10.30 மணி), நடை திறப்பு (மாலை 5.30 மணி), தீபாராதனை (இரவு 6.30 மணி), அத்தாழ பூசை (இரவு 7.30 மணி), நடை அடைப்பதற்கான பூசை (இரவு 8.00 மணி) ஆகிய பூசைகள் நடத்தப்பெறுகின்றன.
திருவிழாக்கள்
[தொகு]இக்கோயிலில் விருச்சிக மாதத்தில் திருவோண விழா, மகர மாதம் 27இல் பிரதிஷ்டை தின விழா, கிருஷ்ண ஜெயந்தி, நவராத்திரி, ராமாயண மாசாச்சரணம், மகா சிவராத்திரி, ஆத்யாத்மிகா பிரபாஷணம், பாகவத சப்தஹம், கீதா யத்னம் உள்ளிட்ட விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.
மேலும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]