அந்தமானிய மொழிகளின் அகரமுதலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அந்தமான் தீவுகள்

அந்தமானிய மொழிகளின் அகரமுதலி ( Great Andamanese Language dictionary) என்பது அந்தமான் தீவுகளில் உள்ள மொழிகள் குறித்துத் தொகுக்கப்பட்ட முதலாவது அகரமுதலி ஆகும். இதனை புதுதில்லி சவகர்லால் நேரு பல்கலைக்கழகப் பேராசிரியர் அன்வித்தா அபி தொகுத்துள்ளார். இத் தொகுதியில் அந்தமான் தீவுகளில் பேசப்படும் போ, கோரா, ஜேரு, மற்றும் சாரே ஆகிய நான்கு மொழிகள் தொகுக்கப்பட்டுள்ளன. இவற்றில் போ மற்றும் கோரா ஆகிய இரண்டு மொழிகள் ஏற்கனவே அழிந்துவிட்டன. ஏனைய இரண்டு மொழிகள் ஜேரு மற்றும் சாரே ஆகியவை மிகச் சிலரால் மட்டும் பேசப்பட்டு வருகிறது.

அகராதியில் இணைக்கப்பட்டுள்ள சொற்கள் அனைத்தும் ஆங்கிலத்திலும் இந்தியிலும் மிக விரிவாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

உசாத்துணை[தொகு]

விக்கிசெய்தியில்

தொடர்பான செய்திகள் உள்ளது.