அட்சஸன் எட்வர்டு குட்ரிச்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அட்சஸன் எட்வர்டு குட்ரிச்
Edward Goodrich Acheson
1911 ஆண்டைய ஒரு ஓவியத்தில் அட்சஸன் எட்வர்டு குட்ரிச்
பிறப்பு(1856-03-09)மார்ச்சு 9, 1856
அமெரிக்கா, வாசிங்டன்
இறப்புசூலை 6, 1931(1931-07-06) (அகவை 75)
அமெரிக்கா, நியூயார்க் நகரம்
தேசியம்அமெரிக்கர்
அறியப்படுவதுசிலிக்கான் கார்பைடு
விருதுகள்John Scott Medal (1894)
John Scott Medal (1901)
Perkin Medal (1910)
Edward Goodrich Acheson Award (1929)

அட்சஸன் எட்வர்டு குட்ரிச் (Edward Goodrich Acheson) ( 9, மார்ச் 1856 – 6, சூலை 1931) என்பவர் அமெரிக்க வேதியியலாளர் ஆவார்.[1] பென்சில்வேனியா, வாசிங்டன் நகரில் ஏழைக்குடும்பத்தில் பிறந்த இவர் சிறுவயதிலேயே வேலைக்குச் செல்ல நேர்ந்தது. ஓய்வு நேரங்களில் இவர் சோதனைகள் செய்து புதுப்பொருளைக் கண்டுபிடித்தார். மின்சாரத்தில் ஆர்வம் பிறந்து இவர் எடிசனிடம் வேலைக்குச் சேர்ந்தார். சில ஐரோப்பிய நாடுகளில் மின் விளக்குகளைப் போட இவர் உதவினார். கார்போரண்டம் என்ற மெருகூட்டியை இவர் கண்டுபிடுத்தார். பென்சில் கரியை மிகத்தூய நிலையில் தயாரிக்க இவர் வகுத்த முறையினால் இவர் பணக்காரரானார். இப்பொருளைக் கொராயீடு நிலையிற்கொண்ட புதிய உயவுகளை இவர் கண்டுபிடித்தார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Chambers Biographical Dictionary, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-550-18022-2, page 6
  2. "அட்சஸன் எட்வர்டு குட்ரிச்". தமிழ்க் கலைக்களஞ்சியம் (முதல்) முதல். (1954). Ed. பெரியசாமி தூரன்.. சென்னை: தமிழ் வளர்சிக் கழகம். 27. அணுகப்பட்டது 16 மார்ச் 2019.