உள்ளடக்கத்துக்குச் செல்

அடிமுறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அடிமுறை
தோன்றிய நாடுதமிழ்நாடு, இந்தியா
உருவாக்கியவர்பாரம்பரியமாக சித்தர்கள்
ஒலிம்பிய
விளையாட்டு
இல்லை

அடிமுறை என்பது தமிழ்நாட்டுத் தற்காப்புக் கலை-விளையாட்டுகளில் ஒன்று. அடிமுறை விளையாட்டில் கையாலும் காலாலும் தாக்கி எதிராளியை வீழ்த்துவர்.[1][2][3]

அடிமுறையில் அடவுகள்

அடிமுறை பயில்வோருக்கு 18 அடவுகள் சொல்லித் தரப்படும். அடவு என்பது முன்னும் பின்னும் கால்-தப்படி வைத்துக் கையை ஓட்டும் பாங்கு. இதில் எதிராளி வலிதாங்க மாட்டாமல் விழுவார்.

அடிமுறையில் பாணிகள்

அடிமுறைத் தற்காப்பு விளையாட்டில் ஒற்றைச்சுவடு, அங்கச்சுவடு என இருவேறு பாணிகள் உண்டு

அங்கச்சுவடு

தேக்வொண்டோவில் உள்ள கால்உதை
கராத்தேயில் உள்ள கைக்குத்து
ஜுட்ஜூவில் உள்ள உள்பூட்டுகள்
ஜூடோவில் உள்ள தூக்கி எறிதல்
குங்பூவில் உள்ள கைவெட்டு
வர்மக்கலையில் உள்ள வர்ம-உறுப்பு தாக்கம்

ஆகிய அனைத்துக் கூறுகளையும் உள்ளடக்கமாய்க் கொண்டிருப்பதுதான் அடிமுறை விளையாட்டின் அங்கச்சுவடு.[சான்று தேவை]

பாவலா

முன்னால் ஓரடிப் பாவலா
பின்னால் ஓரடிப் பாவலா
என்று இப்படி ஈரடி, மூவடி, நாலடிப் பாவலாக்களும் உண்டு.
மற்றும் முன்னுடான், பின்னுடான், துள்ளுடான் என்னும் பாங்குகளும் இதில் உண்டு.

இவற்றையும் பார்க்க

கருவிநூல்

தமிழர் விளையாட்டு மடல், மாத இதழ், தமிழ்நாடு அரசு வெளியீடு, தொகுப்பு நூல் - மறைகின்ற விளையாட்டுகள் 2002

மேற்கோள்கள்

  1. Zarrilli, Phillip B. (1998). When the Body Becomes All Eyes: Paradigms, Discourses, and Practices of Power in Kalarippayattu, a South Indian Martial Art. Oxford University Press. p. 27 – 29. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-563940-7. பார்க்கப்பட்ட நாள் 14 January 2021.
  2. Raj, J. David Manuel (1977). The Origin and the Historical Development of Silambam Fencing: An Ancient Self-Defence Sport of India. Oregon: College of Health, Physical Education and Recreation, Univ. of Oregon. pp. 44, 50, 83.
  3. Luijendijk, D.H. (2005) Kalarippayat: India's Ancient Martial Art, Paladin Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-58160-480-7
"https://ta.wikipedia.org/w/index.php?title=அடிமுறை&oldid=3850848" இலிருந்து மீள்விக்கப்பட்டது