உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:Ramprasad20

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராம்பிரசாத்
எனது புகைபடம்
எனது புகைபடம்
பெயர்ராம்பிரசாத்
இயற்பெயர்ராம்பிரசாத்
சொந்தப் பெயர்ராம்பிரசாத்
பால்ஆண்
பிறந்த நாள்20/01/1998
பிறந்த இடம்திருவண்ணாமலை
தற்போதைய வசிப்பிடம்தமிழ்நாடு
நாடு இந்தியா
தேசியம்இந்தியன்
இனம்தமிழன்
கல்வி, தொழில்
கல்விPursuing B.A.
கல்லூரிகிறித்து பல்கலைக்கழகம்
பல்கலைக்கழகம்கிறித்து பல்கலைக்கழகம்
பாடசாலைஸ்ரீ விஜய் வித்யாலயா மேல் நிலைப் பள்ளி
கொள்கை, நம்பிக்கை
பொழுதுபோக்குபுத்தகங்கள் படித்தல்
சமயம்இந்து மதம்

என் பெயர் ராம்பிரசாத். நான் தமிழகத்தை சேர்ந்த தருமபுரி மாவட்டத்தில் உள்ள மாங்கரை என்னும் ஊரை சேர்ந்தவன். நான் ஜனவரி மாதம் 20ஆம் தேதி 1998ஆம் ஆண்டு திருவண்ணாமலை என்னும் ஊரில் பிரபாகரன்-ரேணுகா தம்பதியருக்கு மகனாய் பிறந்தேன். நான் மூன்றாம் வகுப்பு வரை செந்தில் மெட்ரிக் பள்ளியில் படித்தேன். நான் தருமபுரி ஸ்ரீ விஜய் வித்யாலயா மேல் நிலைப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்புவரை பயின்றேன். தற்பொழுது பெங்களூரில் உள்ள கிறித்து பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு கலை இளங்கலைப் பட்டப்படிப்பை மேற்க்கொள்கின்றேன்.

            வரலாறு,அரசிய அறிவியல்,பொருளாதாரம் பாடங்களைப் பயில்கின்றேன். இம்மூன்றின் கலவை ஒன்றை ஒன்று புரிந்துகொள்ளவும் எதிர்காலத்தில் செம்மையாகவும் பகுத்தறிவோடும் செயல்படவும் உதவும் என்னும் புரிதலோடும் தந்தையின் வழிகாட்டுதலாலும் இப்பாடங்கலை தேர்வு செய்தேன். ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்னும் ஆசை கொண்டவன்.
           தமிழிழும் ஆங்கிலத்திலும் திரைபடங்கள் பார்ப்பதும் புத்தகங்கள் படிப்பதும் எப்பொதும் எனது பொழுதுப்போக்குகளுள் முக்கிய பங்குவகிக்கின்றன. புத்தங்கள் படிப்பது எனக்கு மன அமைதியையும் நிறைவையும் தருவதாக கருதுகின்றேன்.தந்தையோடு உரையாடும் நேரத்தை பரிசாக கருதுபவன்.நண்பர்களுடன் நேரத்தை கழிப்பதைவிட நூலகத்தில் நேரத்தை கழிப்பது பிடிக்கும். இந்திய மற்றும் உலக அரசியலை பின்தொடர்வதிளும் தினந்தோறும் செய்தித்தாள் வாசிப்பதிளும் மிகுந்த ஆர்வம் கொண்டவன். 
           நண்பர்களுடன் சுற்றுலா செல்ல மிகவும் ஆர்வம் கொண்டவன். அது ஒரு விதமான அமைதியை தருவதோடு வாழ்வில் பல புது அனுபவங்களைத் தருகிறது. இது மட்டுமின்றி புதியவற்றை கற்றுக்கொள்ள மிகவும் ஆரவமுடன் உள்ளவன் நான். ஞாயிற்றுக் கிழமைகளில் நண்பர்களுடன் மட்டைப் பந்து விளையாடவேன். இந்திய மற்றும் சர்வதேச போட்டிகளை தந்தையுடன் சேர்ந்து சென்று நேரில் பார்ப்பது மிகவும் பிடிக்கும். 
           தனிமனித ஒழுக்கத்துடன் கூடிய தாராளவாதத்தின் சித்தாந்ததில் ஈர்ப்பு கொண்டவன். வேதாத்திரி மகரிஷி அவர்களின் கொள்கைகளில் உடன்பாடு கொண்டவன்.உடற்பயிற்சியிலும் தியானத்திலும் இடுபாடு கொண்டவன்.எனக்கு நான் என்றும் நேர்மையாகவும் பொறுப்பாகவும் இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்பவன்.நேரத்தை பயனுள்ளதாகவும் பிடித்ததாகவும் பயன்படுத்துவதில் தந்திரமானவன்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Ramprasad20&oldid=2018784" இலிருந்து மீள்விக்கப்பட்டது