2022 காபூல் பள்ளிவாசல் குண்டுவெடிப்பு
2022 காபூல் பள்ளிவாசல் குண்டுவெடிப்பு August 2022 Kabul mosque explosion | |
---|---|
இடம் | அபு பக்கர் அல் சாதிக்கு பள்ளிவாசல், காபுல், ஆப்கானித்தான் |
நாள் | ஆகத்து 17, 2022 |
இறப்பு(கள்) | 20+[1] |
காயமடைந்தோர் | 40+ |
2022 காபூல் பள்ளிவாசல் குண்டுவெடிப்பு (August 2022 Kabul mosque bombing) ஆப்கானித்தான் தலைநகர் காபூலில் அமைந்துள்ள அபு பக்கர் அல் சாதிக் பள்ளிவாசல் ஒன்றில் தொழுகையின்போது குண்டு வெடித்ததைக் குறிக்கிறது.[2][3] ஆகத்து மாதம் நடந்த இக்குண்டு வெடிப்பில் 20 பேர் உயிரிழந்திருப்பதாகவும் 40 பேருக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.[4][5] வெடிவிபத்தை அடுத்து பள்ளிவாசலுக்கு அருகில் வசிப்பவர்களும் துப்பாக்கிச் சத்தத்தை கேட்டதாக தெரிவித்தனர்.[2]
பாதிக்கப்பட்டவர்கள்
[தொகு]காபூலில் உள்ள அவசர மருத்துவமனையில் குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்ட 27 பேர் அனுமதிக்கப்பட்டனர்.[5] மருத்துவமனைக்கு வரும்பொழுதே இருவரும் மருத்துவமனை சிகிச்சையின்போது ஒருவரும் மரணமடைந்தனர்.[5] பலியானவர்களில் இசுலாமிய மத போதகரான அமீர் முகமது காபூலியும் ஒருவர் என தெரியவந்துள்ளது. முகமது காபூலி இசுலாமியப் பள்ளி ஒன்றையும் நடத்தி வந்துள்ளார்.[1][6] மாலை நேர தொழுகையின்போது இந்த தாக்குதலானது நிகழ்ந்துள்ளது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை.[7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Faiez, Rahim (August 17, 2022). "Bombing at Kabul mosque kills 10, including prominent cleric". Associated Press. https://apnews.com/article/religion-bombings-kabul-taliban-d8c5d97123419f3880c24097cfd37a9e. பார்த்த நாள்: August 17, 2022.
- ↑ 2.0 2.1 "At least 50 killed after explosion at Afghanistan mosque: Reports". August 17, 2022. Archived from the original on ஆகஸ்ட் 29, 2022. பார்க்கப்பட்ட நாள் August 17, 2022.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Guler, Bilal (August 17, 2022). "Blast in Afghan capital Kabul mosque, casualties feared". Anadolu Agency. https://www.aa.com.tr/en/asia-pacific/blast-in-afghan-capital-kabul-mosque-casualties-feared/2663517. பார்த்த நாள்: August 17, 2022.
- ↑ "Explosion erupts inside Kabul mosque, police say". August 17, 2022. பார்க்கப்பட்ட நாள் August 17, 2022.
- ↑ 5.0 5.1 5.2 "Huge explosion hits Kabul mosque, many casualties feared". August 17, 2022. பார்க்கப்பட்ட நாள் August 17, 2022.
- ↑ Kohsar, Esmatullah (August 17, 2022). "Afghan Capital Sees Multiple Casualties From Explosion at Mosque". Wall Street Journal. https://www.wsj.com/articles/afghan-capital-sees-multiple-casualties-from-explosion-at-mosque-11660774543. பார்த்த நாள்: August 17, 2022.
- ↑ Kosalairaman, Muthu Vinayagam. "காபூல் பள்ளிவாசலில் குண்டுவெடிப்பு - மதபேதகர் உள்பட 20 பேர் பலி". Hindustan Times Tamil. பார்க்கப்பட்ட நாள் 2022-08-18.