2015 சூபா ஏஎன்-12 வானூர்தி விபத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

2015 சூபா ஏஎன்-12 வானூர்தி விபத்து
விமானம் இதற்கு முன்னர் ஏரோபிளாட் மற்ற இரண்டு நிறுவனங்கள் பரிமாறப்பட்டது
விபத்து சுருக்கம்
நாள்நவம்பர் 4, 2015 (2015-11-04)
சுருக்கம்விசாரணையின் கீழ், மிகைச்சுமை சந்தேகிக்கப்படுகிறது
இடம்தெற்கு சூடான் தலைநகர் சூபா சர்வதேச வானூர்தி தளம் அருகில் வெண் நைல்லிருந்து 800 மீட்டர் தொலைவில்
பயணிகள்12
ஊழியர்6
உயிரிழப்புகள்37[1]
தப்பியவர்கள்2[2]
வானூர்தி வகைஆன்டோனோவ் ஏஎன்-12பிகே
இயக்கம்நேச சேவைகள், லிமிடெட்
வானூர்தி பதிவுஇஒய்-406
பறப்பு புறப்பாடுதெற்கு சூடான் சூபா சர்வதேச வானூர்தி தளம் சூபா
சேருமிடம்பலோய்ச் விமான நிலையம், தெற்கு சூடான்

2015 சூபா ஏஎன்-12 வானூர்தி விபத்து (2015 Juba An-12 crash),[3] 2015-ஆம் ஆண்டு நவம்பர் 4-ம் திகதி தெற்கு சூடான் தலைநகர் சூபாவில் (Juba) வெண் நைல் (White Nile) பகுதியில் ஏற்பட்டது.[4] இந்த விபத்தின்போது 6 விமான சேவைப் பணியாளர்கள், 12 பயணிகள் (அல்லது கூடுதலாக) (வேறுபட்ட மூலங்கள்) இருந்துள்ளனர். நம்பகத்தக்க மூலத்தின்படி 37 பேர்கள் இவ்விபத்தில் பலியாகியுள்ளனர்.[5] மேலும் இந்நிகழ்வில் ஒரு இளம் பயணரும், மற்றும் ஒருவயது பெண் குழந்தையும் உயிருடன் இருந்தது கண்டறியப்பட்டது.[6][7]

விபத்து விவரம்[தொகு]

விபத்துக்குள்ளான இவ்வானூர்தி, தெற்கு சூடான் தலைநகர் சூபா சர்வதேச வானூர்தி தளத்திலிருந்து (Juba International Airport),[8] வடகிழக்கு பிராந்தியத்திலுள்ள எண்ணெய் வயலான பலோய்ச் வானூர்தி தளம் (Paloich Airport)[9] நோக்கிப் புறப்பட்டது. சூபா வானூர்தி தளத்தின் 13-ம் எண் ஓடுபாதையில் மேலேறிய அவ்வானூர்தி, சிறிது நேரத்தில் எதிர்த்திசையிலுள்ள 1100 மீட்டர் (3600 அடி) உயரமுள்ள ஒரு மலையை கடந்து வெள்ளை நைல் நதியின் (White Nile) பகுதியில் விபத்தானதாக மூலத்தில் உள்ளது.

தென் சூடான் அதிகாரிகளின் அறிக்கைப்படி, பெருமளவில் எண்ணெய் வயல் பணியாளர்கள் பயணித்ததால் வானூர்தி பெருஞ்சுமையாக இருந்துள்ளது.[10] தென் சூடான் அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், குழுவில் குறைந்தது 18 பேர்கள் இருந்ததாக கூறினார்.[11] ஆரம்பத் தகவல்களின்படி, பலி எண்ணிக்கை பல்வேறாக இருந்தது. ஆனால் தென் சூடானின் போக்குவரத்து அமைச்சர், குஒங் தன்ஹியர் கத்லோக் (Kuong Danhier Gatluak) மொத்தம் 37 பேர்கள் பலியானதாக அறிக்கையில் தெரிவித்தார்.[12] சம்பவத்தின்போது, வானூர்தி சேவைபணியாளர்கள் குழுவில் ஐந்து ஆர்மேனியர்களும், உருசியர் ஒருவரும் உள்ளடக்கியதாக காணப்படுகிறது.[13] முதற்கட்ட தகவல்படி, மூன்று பயணிகள் உயிர் தப்பியதாகவும், அம்மூவரில் ஒருவர், அவருக்கு சம்பந்தமற்ற 13-மாத கைக்குழந்தை ஒன்றை கையிலேந்தியபடி இருந்துள்ளார். பின்பு, மூவரில் ஒருவர் வைத்தியசாலையில் இறந்துள்ளார். அவர், சேவைபணியாளரில் ஒருவரென மூலத்தில் உள்ளது.[14]

வானூர்தி விவரம்[தொகு]

விபத்துக்குள்ளான இவ்வானூர்தி, 1971-ம் ஆண்டு தாஷ்கண்ட் வானூர்தி தயாரிப்பு சங்கம் (Tashkent Aviation Production Association(TAPA) எனும் கூட்டுக் குழுவால் உருவாக்கப்பட்டதாகும். சுருக்கமாக, ஏஎன்-12 வானூர்தி (An-12 aircraft) என்றழைக்கப்படும் இந்த வானூர்தி ஆன்டோனோவ் ஏஎன்-12பிகே (Antonov An-12BK) பெயருடைய இது, ஒரு சரக்கு வானூர்தியாகும். இஒய்-406 (EY-406) எம்எஸ்என் 01347704 ( msn 01347704) (தாஜிகிஸ்தான்), என்ற பதிவுற்ற இச்சரக்கு வானூர்தி, நேச சேவைகள் வரையறை (Allied Services Ltd) எனப்படும் தளவாடங்கள் நிறுவனம், குத்தகை அடிப்படையில் தாஜிகிஸ்தான் ஆசியா எய்ர்வேசு வான் போக்குவரத்து நிறுவனத்தால், தென் சூடான் சூபா வானூர்தி தளத்தில் இயக்கி வந்ததாக மூலத்தின் மூலம் அறியப்பட்டது.[15]

சான்றாதாரங்கள்[தொகு]

 1. "Baby ‘survived’ South Sudan plane crash in man’s arms". பார்த்த நாள் 2015-11-08.
 2. "Lone Adult Survivor of South Sudanese Plane Crash Recounts Story of How He Saved a Baby’s Life". பார்த்த நாள் 2015-11-08.
 3. Accident description|Aviation Safety Network|Last updated: 19 December 2015|வலை பார்வை: திசம்பர் 19 2015
 4. South Sudan plane crash kills dozens; baby among 3 survivors-By Don Melvin and Stephanie Halasz, CNN Updated 1709 GMT (0109 HKT) November 4, 2015|வலை பார்வை: திசம்பர் 18 2015
 5. Death toll ‘over 30′ in South Sudan cargo plane crash|By Parach Mach|Nov 04, 2015|வலை பார்வை: திசம்பர் 18 2015
 6. Eastern Mirror|JUBA, NOVEMBER 7|வலை பார்வை: திசம்பர் 18 2015
 7. Baby and man survive South Sudan plane crash|Thursday 5 November 2015 20.13 GMT|வலை பார்வை: திசம்பர் 18 2015
 8. Juba Airport profile|Aviation Safety Network (ASN)|இணைய பார்வை:19/12/2015
 9. Paloich Airport profile|Aviation Safety Network (ASN)|இணைய பார்வை:19/12/2015
 10. Over 40 killed in plane crash, as Juba regrets the incident|SUDAN TRIBUNE| THURSDAY 5 NOVEMBER 2015|வலை பார்வை:19/12/2015
 11. Cargo Plane Crashes in South Sudan, Killing Dozens|By NICHOLAS BARIYO|Updated Nov. 4, 2015 4:58 p.m. ET|வலை பார்வை:21/12/2015
 12. S. Sudan aviation chief : Plane not OKed to carry passengers|Jason Patinkin, Associated Press Nov. 5, 2015, 2:47 PM|வலை பார்வை:21/12/2015
 13. 5 Armenian Pilots Die In South Sudan Plane Crash|November 4, 2015|வலை பார்வை:23/12/2015
 14. The Aviation Herald|Crash: Allied Services AN12 at Juba on Nov 4th 2015, impacted hill in initial climb|By Simon Hradecky, created Wednesday, Nov 4th 2015 11:16Z, last updated Wednesday, Nov 11th 2015 17:19Z|வலை பார்வை:23/12/2015
 15. Aviation Safety Network|Accident description|Wednesday 4 November 2015|வலை காணல்:23/12/2015

புற ஊடக இணைப்புகள்[தொகு]