1933 டிக்ஸ்முய்டி இம்பீரியல் ஏயர்வேசு விபத்து
ஆம்ஸ்ட்ராங் வித்வொர்த் அர்கோசி, (1926 ஆம் ஆண்டு இம்பீரியல் ஏயர்வேசு போன்ற ஒரு அர்கோசி வானூர்தி) | |
விபத்து சுருக்கம் | |
---|---|
நாள் | 1933, மார்ச்சு 28 |
சுருக்கம் | தீ, சந்தேகத்திற்குரிய நாசவேலை |
இடம் | டிக்ஸ்முய்டி அருகில், பெல்ஜியம் |
பயணிகள் | 12 |
ஊழியர் | 3 |
உயிரிழப்புகள் | 15 (அனைவரும்) |
தப்பியவர்கள் | 0 |
வானூர்தி வகை | ஆம்ஸ்ட்ராங் வித்வொர்த் அர்கோசி II |
வானூர்தி பெயர் | லிவர்பூல் மாநகரம் |
இயக்கம் | இம்பீரியல் ஏயர்வேசு |
வானூர்தி பதிவு | G-AACI |
பறப்பு புறப்பாடு | பிரசெல்சு வானூர்தி நிலையம் |
சேருமிடம் | கிராய்டன் வானூர்தி தளம் |
1933 டிக்ஸ்முய்டி இம்பீரியல் ஏயர்வேசு விபத்து (1933 Imperial Airways Diksmuide crash) எனும் இந்த அபாயகரமான, மற்றும் நாசவேலைக் காரணமாக சந்தேகிக்கப்படும் இவ்வானூர்தி விபத்து, 1933-ம், ஆண்டு, மார்ச்சு 28, அன்று, நடந்தது. இந்த விபத்தில் சிக்கிய "ஆம்ஸ்ட்ராங் வித்வொர்த் அர்கோசி" லிவர்பூல் மாநகரம் (Armstrong Whitworth Argosy (City of Liverpool) வகையை சார்ந்த இவ்வானூர்தி, 'பிரித்தானிய விமான நிறுவனமான' "இம்பீரியல் ஏயர்வேசு" மூலம் இயங்கிவந்ததாகும்.[1] வடக்கு பெல்ஜியத்தின் 'டிக்ஸ்முய்டி' அல்லது 'டிக்ஸ்முடி' (Diksmuide or (Dixmude) எனும் பகுதியின் அருகே விழுந்து நொறுங்கி தீப்பிடித்ததில், வானூர்தியில் பயணித்த அனைவருமே (15-பேர்கள்) கொல்லப்பட்டனர். அந்நேரத்தில் இந்நிகழ்வை, பிரித்தானிய வானூர்தி வரலாற்றில் இறப்புகளை ஏற்படுத்திய விபத்தாக பதிவு செய்துள்ளனர். மேலும் இவ்விபத்து, எப்போதாவது நடக்கும் நாசவேலை விபத்துக்களில் இதுவே முதல் வானூர்தி விபத்து என்று கூறப்பட்டு வருகிறது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Accident description". aviation-safety.net (ஆங்கிலம்). 1996–2016. பார்க்கப்பட்ட நாள் 2016-04-08.
- ↑ Denham, Terry (1996). World Directory of Airliner Crashes. Yeoford: Patrick Stephens Ltd. p. 21. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-85260-554-5.