1848 ஆம் ஆண்டுப் புரட்சிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1848ஆம் ஆண்டுப் புரட்சிகள்
ஹோரேஸ் வெர்னேயின் 1848 ஓவியம் பாரிகேட் ஆன் த ரூ சௌஃப்லோட் ,[1][2] பின்னணியில் பாரிசின் பாந்தியன் கட்டிடத்தைக் காணலாம்.
தேதி23 பெப்ரவரி 1848- 1849 துவக்கம்
நிகழ்விடம்மேற்கு மற்றும் மத்திய ஐரோப்பா
வேறு பெயர்கள்நாடுகளின் வசந்தம், மக்களின் வசந்த காலம், புரட்சி ஆண்டு
பங்கேற்றவர்கள்பிரான்சு, செருமனி, ஆஸ்திரிய பேரரசு, இத்தாலி, டென்மார்க், வாலாச்சியா, போலந்து, மற்றும் பிற நாட்டு மக்கள்
விளைவுகட்டமைப்பில் பெரும் மாற்றங்களில்லை
குறிப்பிடத்தக்க சமூக பண்பாட்டு மாற்றங்கள்
பிலிப் வெய்ட்டின் 1848 ஓவியம் - ஜெர்மானியா

1848 ஆம் ஆண்டின் ஐரோப்பியப் புரட்சிகள் (European Revolutions of 1848), சில நாடுகளில் நாடுகளின் புத்துயிர்ப்பு, மக்களின் புத்துயிர்ப்புக் காலம்[3] அல்லது புரட்சி ஆண்டு எனப்படுபவை 1848ஆம் ஆண்டில் ஐரோப்பா முழுமையும் ஏற்பட்ட தொடர் அரசியல் எழுச்சிகளாகும். இதுவே முதலும் கடைசியுமான ஐரோப்பா அளவிலான வழமையான ஆட்சி பீடங்களின் வீழ்ச்சியாகும். ஆயினும் ஓராண்டுக்குள்ளேயே பிற்போக்கு சக்திகள் மீண்டெழுந்து புரட்சிகள் பிசுபிசுத்தன. இந்த புரட்சி அலை முதலில் பிரான்சில் பெப்ரவரியில் துவங்கியது. உடனேயே பெரும்பாலான ஐரோப்பாவிலும் இலத்தீன் அமெரிக்காவின் சில பகுதிகளிலும் பரவியது. ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் புரட்சி எழுந்த போதும் பன்னாட்டு புரட்சியாளர்களிடம் எந்தவொரு ஒற்றுமையோ ஒருங்கிணைப்போ இருக்கவில்லை. இந்தப் புரட்சிக்கு ஐந்து காரணிகளாகக் கூறப்படுபவை: அரசியல் தலைமையின் மீதான பரவலான நம்பிக்கையின்மை; மக்களாட்சி மற்றும் கூடுதல் பங்கேற்க விழைவு; உழைப்பாளர்களின் கோரிக்கைகள்; தேசிய எழுச்சி; இறுதியாக, மன்னர்கள், பிரபுக்கள், படைத்துறை மற்றும் விவசாயிகளிடம் குழுமிய பிற்போக்குவாதிகள்.[4] இந்த எழுச்சிப் போராட்டங்களை உறுதியற்ற தற்காலிக சீர்திருத்தவாதிகள், நடுத்தர மக்கள், தொழிலாளிகள் தலைமையேற்று நடத்தினர்; அவர்களால் நெடுங்காலம் தாக்குப் பிடிக்க இயலவில்லை. பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் நாடு கடத்தப்பட்டனர். இவற்றால் எழுந்த குறிப்பிடத்தக்க சீர்திருத்தம் ஆஸ்திரியாவிலும் அங்கேரியிலும் நிலச்சுவான்தார்களின் அமைப்பு நீக்கப்பட்டதுதான். பிரான்சு, செருமனி, இத்தாலி, ஆஸ்திரியா நாடுகளில் குறிப்பிட்டத் தாக்கமேற்படுத்திய இந்த புரட்சிகள் உருசியா, பெரிய பிரித்தானியா, எசுப்பானியா, சுவீடன், போர்த்துக்கல், அல்லது ஆட்டோமான் பேரரசை எட்டவில்லை.[5]

நிகழ்வுகள்[தொகு]

இத்தாலிய நாடுகள்[தொகு]

1848 ஜனவரி ல் முதல் பெரிய புரட்சி சிசிலியில் வெடித்தது எனினும் இது அதிகமாக கவனிக்கப்படவில்லை. வந்தது. போர்போன் ஆட்சிக்கு எதிராக 16 மாதங்களுக்கு இது நீடித்தது.அந்த மாதங்களில் இத்தாலிய கூட்டமைப்பில் அரசியலமைப்பு உருவானது.1860-61 ல் போர்போன் இராச்சியம் ரிசொர்மெண்டோ வால் இரண்டு சிசிலிக்களாக பிரிந்தது

பிரான்ஸ்[தொகு]

பிரான்சில் கம்பஜ்நே டெஸ் பான்குட் ஒடுக்கப்பட பின்னர் "பிப்ரவரி புரட்சி" ஏற்பட்டது. இந்த புரட்சி பிரஞ்சு பொது மக்களிடையே தேசியவாத மற்றும் குடியரசு கொள்கைகளை கொண்ட மக்களால் நிகழ்த்தப்பட்டது என்று நம்பப்படுகிறது.அது லூயிஸ் பிலிப்பின் முடியாட்சியை முடிவக்கு கொண்டு வந்து இரண்டாம் பிரஞ்சு குடியரசு உருவாக வழிவகுத்தது.இந்த அரசு 852 ல் லூயிஸ் நெப்போலியன் தலைமையில் இரண்டாம் பிரஞ்சு பேரரசை உருவாக்கியது.

ஜெர்மானிய மாநிலங்கள்[தொகு]

தெற்கு மற்றும் மேற்கு ஜெர்மனி மாநிலங்களில் பெரிய மக்கள் கூட்டங்கள் மற்றும் வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் மூலம் "மார்ச் புரட்சி" நடைபெற்றது.. எனினும் இதில் போரடியவர்களுக்கிடையே ஒற்றுருமை இல்லாததால் இது ஒடுக்கப்பட்டது.

டென்மார்க்[தொகு]

17 ஆம் நூற்றாண்டின் முதல் முடியாட்சி அமைப்பு மூலம் நிர்வகிக்கப்பட்ட டென்மார்க். அரசர் எட்டாம் கிரிஸ்துவ அரசர் 1848 ல் இறந்த பின்னர் விவசாயிகள் மற்றும் தாராளவாதிகள் இருந்து எதிர்ப்பு கிளம்பியது.இதன் முடிவில் ரிக்ஸ்டாக் என்ற பாரளமன்றத்துடன் அதிகாரத்தை பகிர்ந்து கொள்ள சம்மதித்தார்.

மேற்கோள்கள்[தொகு]

 1. 1848-06-24 (1848-06-24): "Battle at Soufflot barricades-1848" Location:Rue Soufflot, Paris48°50′48″N 2°20′37″E / 48.846792°N 2.343473°E / 48.846792; 2.343473 (1848-06-24: Battle at Soufflot barricades-1848) (linkback://ta.wikipedia.org/wiki/1848_%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D)
 2. Mike Rapport (2009). 1848: Year of Revolution. Basic Books. பக். 201. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780465014361. http://books.google.com/books?id=mRBYlHSKpjsC&pg=PA201&lpg=PA201. "The first deaths can at noon on 23 June." 
 3. Merriman, John, A History of Modern Europe: From the French Revolution to the Present, 1996, p 715
 4. R.J.W. Evans and Hartmut Pogge von Strandmann, eds., The Revolutions in Europe 1848–1849 (2000) pp v, 4
 5. Nor did it reach Spain, Belgium, Sweden, Portugal, or the Ottoman Empire. Evans and Strandmann (2000) p 2

துணைநூல் பட்டியல்[தொகு]

மதிப்பீடுகள்[தொகு]

 • Breunig, Charles (1977), The Age of Revolution and Reaction, 1789 – 1850 (ISBN 0-393-09143-0)
 • Chastain, James, ed. (2005) Encyclopedia of Revolutions of 1848 online from Ohio State U.
 • Dowe, Dieter, ed. Europe in 1848: Revolution and Reform (Berghahn Books, 2000)
 • Evans, R.J.W., and Hartmut Pogge von Strandmann, eds. The Revolutions in Europe, 1848–1849: From Reform to Reaction (2000), 10 essays by scholars excerpt and text search
 • Pouthas, Charles. "The Revolutions of 1848" in J. P. T. Bury, ed. New Cambridge Modern History: The zenith of European power 1830–70 (1960) pp 389–415 online excerpts
 • Langer, William. The Revolutions of 1848 (Harper, 1971), standard overview
 • Rapport, Mike (2009), 1848: Year of Revolution ISBN 978-0-465-01436-1 online review, a standard survey
 • Robertson, Priscilla (1952), Revolutions of 1848: A Social History (ISBN 0-691-00756-X), despite the subtitle this is a traditional political narrative
 • Sperber, Jonathan. The European revolutions, 1848–1851 (1994) online edition
 • Stearns, Peter N. The Revolutions of 1848 (1974). online edition
 • Weyland, Kurt. "The Diffusion of Revolution: '1848' in Europe and Latin America," International Organization Vol. 63, No. 3 (Summer, 2009) pp. 391–423 in JSTOR

பிரான்சு[தொகு]

 • Duveau, Georges. 1848: The Making of a Revolution (1966)
 • Fasel, George. "The Wrong Revolution: French Republicanism in 1848," French Historical Studies Vol. 8, No. 4 (Autumn, 1974), pp. 654–677 in JSTOR
 • Loubère, Leo. "The Emergence of the Extreme Left in Lower Languedoc, 1848–1851: Social and Economic Factors in Politics," American Historical Review (1968), v. 73#4 1019–1051 in JSTOR

செருமனியும் ஆத்திரியாவும்[தொகு]

 • Deak, Istvan. The Lawful Revolution: Louis Kossuth and the Hungarians, 1848–1849 (1979)
 • Hahs, Hans J. The 1848 Revolutions in German-speaking Europe (2001)
 • Hewitson, Mark. "'The Old Forms are Breaking Up, … Our New Germany is Rebuilding Itself': Constitutionalism, Nationalism and the Creation of a German Polity during the Revolutions of 1848–49," English Historical Review, Oct 2010, Vol. 125 Issue 516, pp 1173–1214 online
 • Macartney, C. A. "1848 in the Habsburg Monarchy," European Studies Review, 1977, Vol. 7 Issue 3, pp 285–309 online
 • O'Boyle Lenore. "The Democratic Left in Germany, 1848," Journal of Modern History Vol. 33, No. 4 (Dec., 1961), pp. 374–383 in JSTOR
 • Robertson, Priscilla. Revolutions of 1848: A Social History (1952), pp 105–85 on Germany, pp 187–307 on Austria
 • Sked, Alan. The Survival of the Habsburg Empire: Radetzky, the Imperial Army and the Class War, 1848 (1979)
 • Vick, Brian. Defining Germany The 1848 Frankfurt Parliamentarians and National Identity (Harvard University Press, 2002) ISBN 978-0-674-00911-0).

இத்தாலி[தொகு]

 • Ginsborg, Paul. "Peasants and Revolutionaries in Venice and the Veneto, 1848," Historical Journal, Sep 1974, Vol. 17 Issue 3, pp 503–550 in JSTOR
 • Ginsborg, Paul. Daniele Manin and the Venetian Revolution of 1848–49 (1979)
 • Robertson, Priscilla (1952). Revolutions of 1848: A Social History (1952) pp 309–401

பிற[தொகு]

 • Feyzioğlu, Hamiyet Sezer et al. "Revolutions of 1848 and the Ottoman Empire," Bulgarian Historical Review, 2009, Vol. 37 Issue 3/4, pp 196–205

வரலாற்றியல்[தொகு]

 • Dénes, Iván Zoltán. "Reinterpreting a 'Founding Father': Kossuth Images and Their Contexts, 1848–2009," East Central Europe, April 2010, Vol. 37 Issue 1, pp 90–117
 • Hamerow, Theodore S. "History and the German Revolution of 1848," American Historical Review Vol. 60, No. 1 (Oct., 1954), pp. 27–44 in JSTOR
 • Jones, Peter (1981), The 1848 Revolutions (Seminar Studies in History) (ISBN 0-582-06106-7)
 • Mattheisen, Donald J. "History as Current Events: Recent Works on the German Revolution of 1848," American Historical Review, Dec 1983, Vol. 88 Issue 5, pp 1219–37 in JSTOR
 • Rothfels, Hans. "1848 – One Hundred Years After," Journal of Modern History, Dec 1948, Vol. 20 Issue 4, pp 291–319 in JSTOR

வெளியிணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Revolutions of 1848
என்பதின் ஊடகங்கள் உள்ளன.