1729 இன் வால்வெள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சி/1729 பி1
C/1729 P1
கண்டுபிடிப்பு
கண்டுபிடித்தவர்(கள்): நிக்கொலாசு சரபாத்
கண்டுபிடித்த நாள்: ஆகத்து 1, 1729
வேறு குறியீடுகள்: C/1729 P1, 1729,
1729 இன் வால்வெள்ளி
சுற்றுவட்ட இயல்புகள் A
ஊழி: 2352731.148
(சூன் 16, 1729)
ஞாயிற்றண்மைத் தூரம்: 4.05054 வா.அ[1]
மையப்பிறழ்ச்சி: 1 (அனுமானம்)
சாய்வு: 77.095°[1]
கடைசி அண்மைப்புள்ளி: சூன் 16, 1729[1]
அடுத்த அண்மைப்புள்ளி: தெரியவில்லை

1729 இன் வால்வெள்ளி (Comet of 1729, அல்லது C/1729 P1 அல்லது சரபாத் வால்வெள்ளி (Comet Sarabat) என்பது காலச்சுழற்சி அற்ற ஒரு வால்வெள்ளி ஆகும். தனி ஒளிப்பொலிவெண் −3[2] என்ற எண்ணைக் கொண்ட இவ்வால்வெள்ளி இதுவரை அவதானிக்கப்பட்டவற்றுள் ஒளிர்ப்புக் கூடியதாகும்.[3] எனவே இதுவே இதுவரை காணப்பட்ட வால்வெள்ளிகளுள் மிகப் பெரியதாகக் கருதப்படுகிறது.[4]

கண்டுபிடிப்பு[தொகு]

இந்த வால்வெள்ளி எக்கூலியசு என்ற விண்மீன் குழாமில் இருப்பதை நிக்கொலாசு சரபாத் என்ற குருவானவர் கண்டுபிடித்தார். மர்சேய் பல்கலைக்கழகக் கணிதப் பேராசிரியரும், இயேசு சபையைச் சேர்ந்தவருமான இவர் 1729 ஆகத்து 1 இல் அதிகாலையில் இதனைக் கண்டுபிடித்தார்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "JPL Small-Body Database Browser: C/1729 P1". Jet Propulsion Laboratory. சனவரி 16, 1730. பார்க்கப்பட்ட நாள் சூலை 26, 2011.
  2. Kidger, M. 'Comet Hale-Bopp Light Curve', NASA JPL, 24-Nov-2008 அன்று பார்க்கப்பட்டது.
  3. இது கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் சீசர் வால்வெள்ளி (C/-43 K1) −3.3 தனி ஒளிப்பொலிவெண் கொண்டதாக இருந்தது; cp. John T. Ramsey & A. Lewis Licht, The Comet of 44 B.C. and Caesar's Funeral Games, Atlanta, 1997, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7885-0273-5.
  4. Moore, P. The Data Book of Astronomy, CRC, 2000, p.232
  5. Lynn, W. T. 'Sarrabat and the comet of 1729', The Observatory, Vol. 19, p. 239–240 (1896).

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=1729_இன்_வால்வெள்ளி&oldid=3653897" இலிருந்து மீள்விக்கப்பட்டது