உள்ளடக்கத்துக்குச் செல்

1,3-இருமெத்தில்பியூட்டைலமீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1,3-இருமெத்தில்பியூட்டைலமீன்
(2S)-இ.மெ.பி.அ
(2R)-இ.மெ.பி.அ
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
4-மெத்தில்பெண்டேன்-2-அமீன்
வேறு பெயர்கள்
(4-மெத்தில்பெண்டேன்-2-ஐல்)அமீன்
இனங்காட்டிகள்
108-09-8 Y
ChemSpider 7620
InChI
  • InChI=1S/C6H15N/c1-5(2)4-6(3)7/h5-6H,4,7H2,1-3H3
    Key: UNBMPKNTYKDYCG-UHFFFAOYSA-N
  • InChI=1/C6H15N/c1-5(2)4-6(3)7/h5-6H,4,7H2,1-3H3
    Key: UNBMPKNTYKDYCG-UHFFFAOYAT
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 7908 CID 7908
  • CC(C)CC(C)N
UNII KXP599H5R6 Y
பண்புகள்
C6H15N
வாய்ப்பாட்டு எடை 101.19 g·mol−1
அடர்த்தி 0.717 கி/மிலி[1]
கொதிநிலை 108–110 °C (226–230 °F; 381–383 K)[1]
தீங்குகள்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

1,3-இருமெத்தில்பியூட்டைலமீன் (1,3-Dimethylbutylamine) என்பது C6H15N என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மம் ஆகும். ஓர் அலிபாட்டிக் அமீனாகக் கருதப்படும் இச்சேர்மம் இருமெத்தில் பியூட்டைலமீன், 4-அமினோ-2-மெத்தில்பெண்டேன் என்ற பெயர்களாலும் இது அடையாளப்படுத்தப்படுகிறது. மெத்திலெக்சேனமீனுடன் கட்டமைப்பு ரீதியாக தொடர்புடைய ஒரு தூண்டுதல் மருந்தாக 1,3-இருமெத்தில்பியூட்டைலமீன் அறியப்படுகிறது. அங்கு ஒரு பியூட்டைல் குழு பெண்டைல் ​​குழுவை மாற்றுகிறது.

இருமெத்தில் பியூட்டைலமீனின் ஐதரோகுளோரைடு மற்றும் சிட்ரேட்டு உப்புகள் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் விற்கப்படும் சில உணவு கூட்டுப்பொருட்களில் அங்கீகரிக்கப்படாத மருந்துப் பொருட்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.[2][3][4] மெத்திலெக்சேனமீனின் மீதான தடைகளைத் தவிர்க்கும் ஒரு வெளிப்படையான முயற்சியில் இது பயன்படுத்தப்படுகிறது.[5] ஐக்கிய அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) இருமெத்தில் பியூட்டைலமீன் கொண்டிருக்கும் எந்த ஓர் உணவுப் பொருளும் "கலப்படம்" செய்யப்பட்டவை என்று கருதுகிறது. உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் எதிர்ப்பையும் மீறி இருமெத்தில் பியூட்டைலமீன் அமெரிக்காவில் தொடர்ந்து விற்கப்படுகிறது.[6]

பாதுகாப்பு

[தொகு]

இருமெத்தில் பியூட்டைலமீன் பற்றிய அறியப்பட்ட மனித பாதுகாப்பு ஆய்வுகள் எதுவும் இல்லை மற்றும் அதன் ஆரோக்கிய விளைவுகள் முற்றிலும் தெரியவில்லை.[2][3][7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "1,3-Dimethylbutylamine". Sigma-Aldrich.
  2. 2.0 2.1 Cohen, Pieter A.; Travis, John C.; Venhuis, Bastiaan J. (2015). "A synthetic stimulant never tested in humans, 1,3-dimethylbutylamine (DMBA), is identified in multiple dietary supplements". Drug Testing and Analysis 7 (1): 83–7. doi:10.1002/dta.1735. பப்மெட்:25293509. 
  3. 3.0 3.1 "Unapproved Synthetic Stimulant "DMBA" Found in Multiple Dietary Supplements". NSF International. Archived from the original on 2016-11-22. பார்க்கப்பட்ட நாள் 2015-03-21.
  4. "FDA Warns 14 Sports Supplement Companies Of Illegal DMBA (AMP Citrate)". Forbes. May 6, 2015.
  5. "Stimulant Potentially Dangerous to Health, FDA Warns". U.S. Food and Drug Administration. April 11, 2013. பார்க்கப்பட்ட நாள் March 10, 2015.
  6. Cohen, Pieter A.; Wen, Anita; Gerona, Roy (1 December 2018). "Prohibited Stimulants in Dietary Supplements After Enforcement Action by the US Food and Drug Administration". JAMA Internal Medicine 178 (12): 1721–1723. doi:10.1001/jamainternmed.2018.4846. பப்மெட்:30422217. 
  7. "Revealing the hidden dangers of dietary supplements". Science. 20 August 2015. doi:10.1126/science.aad1651. http://news.sciencemag.org/health/2015/08/feature-revealing-hidden-dangers-dietary-supplements.